யாருடைய செயல்பாட்டிற்காகவும், வட மாகாண தேர்தலை நடத்தவில்லை என அங்கு வாழும் பொது மக்களின் தேவைகளைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரம் ஒரு நிலையை அடைந்துள்ள நிலையில், தேர்தலை நடத்தக் கூடிய ஏதுநிலை உள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜனாதிபதியின் இன்றைய அறிவித்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கருத்து தெரிவிக்கையில், வட மாகாண தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியானதன் பின்னரே தமது நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமது கட்சி கூடி ஆராய்ந்ததன் பின்னரே தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இது தவிர, வேறு எவருடனனும் இணைந்து அரசியல் செயல்பாட்டை முன்னெடுக்கும் எண்ணம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பில், அவதானமாக செயல்படும் அரசாங்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொஸ்டன் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கொண்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் பிறிதொருவர் கைது செய்யப்பட்டார்.
அவ்வாறான சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றிருந்தால், மனித உரிமைகள் தொடர்பாக பேசுபவர்கள் பெரும்பாலும், குற்றச்சாட்டு அடிப்படையிலேயே கருத்து வெளியிட்டிருப்பார்கள்.
குற்றம் சாட்டுவதில் மாத்திரம் பலன்கள் கிடைப்பதில்லை என தெரிவித்த ஜனாதிபதி, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தகுந்த சாட்சிகளை முன்வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்,
இதனிடையே, இலங்கைக்கு அமெரிக்காவினால் வழங்கப்படும் நிதி உதவிகளை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக ஊடக பிரதானிகள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பதில் வழங்கினார்.
அமெரிக்காவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற நிதி உதவியில் பெரும்பாலானவை, இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தவர்கள், கோதுமை மா போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கும், வட மாகாணத்தில் நில கண்ணி வெடி அகற்றுவதற்குமே பயன்படுத்தப்பட்டது.
தற்போது முகாம்களில் தங்கியிருந்தவர்கள் தமது சொந்த இடங்களில் மீள குடியேற்றப்பட்டதனாலும், கண்ணி வெடி அகற்றும் பணிகள் 95 சத வீதம் நிறைவடைந்துள்ளமை காரணமுமாகவே அமெரிக்காவின் நிதி உதவிகள் குறைக்கப்பட்டதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்த நிலையில், அலரி மாளிகையில் இன்ற புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்ற போது, ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில் பயிர்ச் செய்கையின் போது விளைச்சலை எதிர்பார்ப்பது போன்று மாணவர்களின் திறமைகளில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.
Geen opmerkingen:
Een reactie posten