தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கும் கிராமங்களில் அபிவிருத்தி என்பது எட்டாக்கனி!- பா.அரியநேத்திரன் எம்.பி!!


பழைய ஆயுதங்கள் இரும்புக் கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 01:34.07 PM GMT ]
வடக்கில் கைப்பற்றப்பட்ட பழைய ஆயுதங்கள் அனுராதபுரம் மற்றும் நொச்சியாகம பிரதேசத்தில் இரும்புக்கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட குழுவொன்றினால் பீரங்கிக் குண்டுகள், பீரங்கிப் பாகங்கள், வெற்று மோட்டார் குண்டு உள்ளிட்ட பொருட்கள் இவ்வாறு விற்பனை செய்யப்படுகின்றது.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட வெடிபொருட்கள் காரணமாக அண்மையில் வெடிப்புச் சம்பவமொன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பழைய ஆயுத விற்பனையினால் பிரதேச மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவங்கள் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கும் கிராமங்களில் அபிவிருத்தி என்பது எட்டாக்கனி!- பா.அரியநேத்திரன் எம்.பி
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 02:04.43 PM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆதரவு வழங்கும் கிராமங்களில் அபிவிருத்திகள் என்பது எட்டாக் கனியாகவேயுள்ளது. இதனை நாம் நேரடியாகவே கண்டுள்ளோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
முனைத்தீவு மேம்பவர் விளையாட்டுக் கழகத்தின் புதுவருட விளையாட்டு விழாவும், சாதனையாளர் கௌரவிப்பும் நேற்று முன்தினம் முனைத்தீவு சக்தி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்கள் வாழும் பெரும்பாலான கிரமங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அதுவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கும் கிராமங்கள் முற்றாக அபிவிருத்தியில் அரசு புறக்கணித்து வருகின்றது என்பதை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் கூறியிருந்தார். இதிலிருந்து அரசாங்கமே தமிழ் மக்களை தாம் புறக்கணிப்பதாக ஒத்துக்கொண்டுள்ளது.
எம் இனம் என்றென்றும் எவருக்கம் சோரம் போகாது. நிச்சயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வருகின்ற உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலில் வெற்றிபெறும். அதனூடாக தமிழ் பிரதேச சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும். அதனை வைத்துகொண்டு தழிழ் கிராமங்கள் அனைத்தும் மிகவிரைவில் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்லப்படும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
இது ஒருபுறருமிக்க எம்மக்களினது ஒழுக்கத்தினைச் சீர்குலைப்பதற்கு பல காய் நகர்த்தல்கள் வெவ்வேறு விதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மட்டக்களப்பு படுவான்கரையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி வைத்திருந்ததை அப்பாடலை அதிபர் கண்டித்துள்ளார். அதனை அறிந்த அருகிலிருந்த இராணுவத்தினர் பாடசாலை அதிபரிடம் போய் மாணவர்கள் எப்படியாவது தமது செயற்பாடுகளை மேற்கொள்ளட்டும். நீங்கள் சத்தம் போடாமலிருங்கள் என குறித்த அதிபரைக் எச்சரித்துள்ளனர்.
இச்சம்பவத்தினூடாக எமது தமிழ் மக்களை அடிமட்டத்திலிருந்து சீர்குலைப்பதற்கு பல காய்நகர்த்தல்களும் செயற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதே புலனாகிறது என்றார்.
அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமைக்கு காரணம், தோல்வியடைவோம் என்ற பயமே!- சீ.யோகேஸ்வரன்
மட்டக்களப்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்வதற்கு காரணம் தாங்கள் தோல்வியடைவோம் என்ற பயமே என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்தின் 23வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதுவருடத்துக்கான கலாசார விளையாட்டு நிகழ்வும், சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
கழகத்தின் தலைவர் ந.துஸ்யனதன் தலைமையில் முனைத்தீவு சக்தி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியத்தை மதிக்கின்ற, நேசிக்கின்ற ஒரு கிராமம் இந்த முனைத்தீவு கிராமம் என்றால் மிகையாகாது. இந்த கிராமம் தமிழ் தேசியத்தை நேசித்த படியினால் கடந்த காலத்திலே இங்கு ஆட்சி செய்த பிரதேச சபை பிரதிநிதிகளால் இந்தக் கிராமம் பல அபிவிருத்திகளில் புறக்கணிக்கப்பட்டது என்பதனை நாங்கள் நன்கு அறிவோம்.
மிக விரைவாக இந்த அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலை நடாத்த வேண்டுமென நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் இவ்வறான நிலைமை இடம்பெறுமாக இருந்தால் இந்த பிரதேசத்தை கைப்பற்றுவது நாங்கள் உறுதி.இவ்வாறு கைப்பற்றப்படும் போது எஞ்சியிருக்கின்ற அபிவிருத்தி தேவைகளை நாங்கள் இணங்கண்டு எங்களது மக்களுக்கு செய்வதற்குரிய ஆயத்தங்களை எங்களால் செய்ய முடியும்.
எனவே முடியுமாக இருந்தால் மிக விரைவாக இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துங்கள். எங்கள் கிராமங்களை நாங்கள் எவ்வாறு அபிவிருத்தி செய்து காட்டுகின்றோம் என்பதனை அவர்களுக்கு எடுத்துக் கூற விரும்புகின்றேன் என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன். பொன்.செல்வராசா, மாகாண சபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, கி.துரைராசசிங்கம், மா.நடராஜா, தமிழரசுக் கட்சி இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன், பெரியபோரதீவு பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.ஐ.சந்திரசேகர, முனைத்தீவு கிராம முன்னேற்றச் சங்க தலைவர் நா.பாக்கியராஜா, முனைத்தீவு மாணிக்கப் பிள்ளையார், பத்திரகாளியம்மன் ஆலய தலைவர் சு.மதிமோகன், முனைத்தீவு சக்தி வித்தியாலய அதிபர் ஆ.புட்கரன், முனைத்தீவு முதியோர் சங்கத் தலைவர் பூ.நவரெட்ணம், முனைத்தீவு மாதர் அபிவிருத்திச் சங்கத் தலைவி திருமதி.இ.கோபாலப்பிள்ளை, கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், சிறுவர்கள், கௌரவம் பெறும் மாணவர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten