தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 april 2013

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் ஆர்வலர்கள், மாணவர்களுக்கு அச்சுறுத்தல்


முடக்க நினைத்தால், முடியாது! - குறிவைக்கப்படும் உதயன்!
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 09:04.35 AM GMT ] [ விகடன் ]
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள், மீண்டும் மீண்டும் பதற்றமான சூழலுக்குள்ளேயே சுழல்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளிதழ் மீது இரண்டாவது முறையாக கடந்த ஏப்ரல் 13ம் தேதி தாக்குதல் நடத்தப்பட... தமிழ் உணர்வாளர்கள் அதிர்ந்துள்ளனர்.
ஏப்ரல் 13 அதிகாலை உதயன் நாளிதழ் அச்சகத்துக்குள் அடையாளம் தெரியாத ஆட்கள் துப்பாக்கியில் சுட்டபடியே புகுந்தனர்.
அங்குள்ள அச்சு இயந்திரங்களையும் காகிதங்களையும் பெற்றோல் ஊற்றி கொளுத்தினர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள காவல் நிலையத்தின் அவசர உதவி எண்ணுக்கு அழைத்தபோது, அவர்கள் போனை எடுக்கவில்லை.
கொழும்பில் இருக்கும் உதயன் அலுவலகம் மூலம் காவல் துறை உயர் அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகே, காவலர்கள் வந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் காரணமாக, அச்சகம் முழுக்க முழுக்க செயல்படாத நிலைமைக்கு சிதைந்துவிட்டது.
இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் தமிழ் பத்திரிகை அலுவலகங்களும் பத்திரிகையாளர்களும் இப்படித் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்.
2013 ஜனவரி 10ம் தேதி, உதயன் பத்திரிகையின் முகவர் வடமராட்சி பகுதியில் தாக்கப்பட்டார்.
உதயன் நாளிதழும் அவரின் வாகனமும் எரிக்கப்பட்டன.
ஜனவரி 15ம் தேதி, யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் உதயன் பத்திரிகையாளர் தாக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தைப் போலவே, ஏப்ரல் 3ம் தேதி கிளிநொச்சியிலும் உதயன் நாளிதழ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
2013ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பல தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
உதயன் நாளிதழ் போலவே தினக்குரல், வலம்புரி போன்ற நாளிதழ் அலுவலகங்களும் தாக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக உதயன் நாளிதழின் நிர்வாக இயக்குனரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன்,
உண்மையை வெளியில் கொண்டு வரக்கூடாது என்று, இலங்கை அரசாங்கம் நினைக்கிறது.
தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் செய்யப் போகும் தீங்குகளை உதயன் நாளிதழ் முன்கூட்டியே சொல்லி விடுவதால், அரசு எங்களை எதிரியாகவே பார்க்கிறது.
தங்கள் பத்திரிகையில் தங்களுக்குச் சாதகமான பொய்ச் செய்திகளை அரசு வெளியிட்டுக் கொள்வதால், 'உதயனில் வருவது எல்லாம் அரசுக்கு எதிரானது’ என்று நினைக்கிறது.
அதனால், அரசுக்கு ஆதரவாக உள்ள டக்ளஸ் தேவானந்தாவும் அவரது ஈ.பி.டி.பி. கட்சியின் கூலிப்படையோடு சேர்ந்து கொண்டு இராணுவ புலனாய்வாளர்களும் உதயன் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
இப்படித் தாக்குதல்கள் நடத்தி, தமிழ் மக்களை பய நிலையிலேயே வைத்த

இலங்கைப் பிரச்சினை! வாக்கு வங்கி அரசியல்வாதிகள்! எச்சரிக்கும் போராட்ட மாணவர்கள்
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 09:14.39 AM GMT ] [ விகடன் ]
மாணவர்களுக்கு சமூகப் பொறுப்பு உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது, இலங்கைத் தமிழருக்கான போராட்டம். தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு என்ற அமைப்பையும் தொடங்கி சிறப்பாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
போராட்டக் குழுவில் தீவிரமாக செயல்பட்டு வரும் சட்டக் கல்லூரி மாணவி திவ்யா,
மாணவர் போராட்டம் தமிழகம் முழுக்க முழு வீச்சுடன் நடந்து வருகிறது. இப்போது 36 கல்லூரிகளை ஒருங்கிணைத்து தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.
போராடிய மாணவர்கள் தி.மு.க-வில் இணைந்து விட்டதாக சொல்வது பொய். லயோலா கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்கள். அங்கு உண்ணாவிரதம் இருந்த எட்டுப் பேரில் ஒருவர்கூட அப்படி இணையவில்லை.
நாங்கள் டெசோவுக்கு ஆதரவாகவும் தி.மு.க. செயற்குழு தீர்மானத்தை ஏற்று ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்துப் போராடியது போன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்கப் பார்த்தனர். அதை எச்சரிகையாகக் கடந்து வந்தோம்.
ஈழ அரசியலை வாக்கு வங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சிகளிடம் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
ஏனென்றால், ஒட்டுமொத்தமாக இந்தக் கட்சிகள் மீது மாணவர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.
முத்துக்குமார் இறந்தபோது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு, கல்லூரிகளை மூடி மாணவர் போராட்டங்களை ஒடுக்கியது.
இன்றைய அ.தி.மு.க. அரசும் அதே அணுகுமுறையைத்தான் கொண்டிருக்கிறது. ஆனாலும் நாங்கள் அதையும் மீறி ஆளுநர் மாளிகை முற்றுகை உள்ளிட்ட பல போராட்​டங்களை வெற்றிகரமாக நடத்தினோம் என்றார்.
தமிழ் மக்களுக்கு நிறைய பிரச்​சினைகள் இருக்கின்றன.
தமிழர் விரோதப் போக்கைக் கொண்ட தேசியக் கட்சிகள் எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு, தூக்குத் தண்டனை எதிர்ப்பு, விவசாய நிலங்களைக் காப்பாற்றுதல், மிக முக்கியமாக சுதந்திர தமிழீழம்.. என்ற எல்லா கோரிக்கைகளிலும் நாங்கள் அரசியல் ரீதியாக எங்களைத் தயார்படுத்தி வருகிறோம்.
இதுவரை போராட்டங்களுக்கு வரவே வராதவர்​கள் என்று சொல்லப்பட்ட தனியார் கல்லூரி மாணவர்களும் எங்களோடு கணிசமாக இணைந்​திருக்கிறார்கள்.
மே 19ம் தேதி பிரமாண்ட பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் அறிவித்​திருக்கிறோம்.
அதுவரை இலங்கையை நிராகரிப்பது, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பது, தமிழக அகதிகளுக்குக் குடியுரிமை கோருவது, சிறப்பு முகாம்களை மூடுவது என மக்களிடம் சென்று பிரசாரம் செய்கிறோம்.
மாணவ நெருப்பு என்பது அணைந்து விட்ட நெருப்பல்ல... அது ஈழ மக்களின் விடுதலைக்காக ஏற்றப்பட்ட விளக்கு என்பதை விரைவில் நிரூபிப்போம் என்றார் நந்தனம் கலைக் கல்லூரி மாணவர் இளையராஜா.
போராட்டத்தில் ஈடுபட்ட எல்லா மாணவர்​களின் தொலைபேசி எண்களும் உளவுப் பொலிஸாரிடம் உள்ளதாம்.
மாணவர்களுக்குப் பெயர் தெரியாத அழைப்புகள் வந்து, 'நீங்க மாவோயிஸ்டா, டெரரிஸ்ட்டா, புலிகளிடம் இருந்து பணம் வருகிறதா?’ என்று அபத்தமான கேள்விகளைக் கேட்கிறதாம், அந்த அநாமதேயக் குரல்.
மாணவர்கள் எச்சரிக்கையாகவும் பொறுப்பாக​வும் நடந்துகொள்ள வேண்டிய தருணம் இது.




இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் ஆர்வலர்கள், மாணவர்களுக்கு அச்சுறுத்தல்
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 02:17.03 PM GMT ]
இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக முறைப்பாடு எழுந்துள்ளது.
இது குறித்து வழக்கறிஞர் புகழ்ழேந்தி மாநகர பொலிஸ் ஆணையரிடம் முறைப்பாடு மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட எதிர்ப்பு தெரிவித்தவர்களின், தொலைபேசிகளை தனியார் துப்பரியும் நிறுவனம் ஒன்று நவீன உபகரணங்களை கொண்டு ஒட்டு கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மட்டுமின்றி, வழக்கறிஞர்கள் சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொலிஸாரின் தொலைபேசிகளும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாக புகழேந்தி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களிலிருந்தும் போராட்டக் குழுவினருக்கு மிரட்டல் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Geen opmerkingen:

Een reactie posten