தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 april 2013

அமெரிக்காவுடன் இலங்கையின் உறவு என்ன? "லவ்வா? இழவா?" - மனோ கணேசன்! -- அமைச்சர் தொண்டமானுக்கும் அறிக்கை


கனடா லிபரல் கட்சியின் புதிய தலைமையும் புலம்பெயர் தலைமைகளும்!– பூநகரான் குகதாசன்
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 09:39.25 AM GMT ]
ஈழத் தமிழர் பிரச்சினை சர்வதேச மயப்பட்டு விட்டதால், உலக நாடுகளில் ஆட்சி அமைக்கவல்ல கட்சிகளின் தலைமைத் தெரிவுகளும், மாற்றங்களும் கூட நம்மவரால் உற்று நோக்கப்பட வேண்டியனவாகி விட்டன. அந்தவகையில் கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் புதிய தலைமைத் தெரிவும் அவதானிப்பிற்குரியதாகின்றது.
சுதந்திர இலங்கையில் கொழும்பில் மையம் கொண்டிருந்த நமது இன விவகாரம், பெங்களுர், திம்பு, புதுடெல்லி எனப் பயணித்து, 2002 'ரணில் - பிரபா' ஒப்பந்தத்தின் பின் தாய்லாந்து, ஜேர்மனி, சுவிற்சலாந்து என உலக நகரங்களை வலம் வந்ததும் தெரிந்ததே.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்குப் பின் ஜென்ம பூமியில் தொடர்ந்த வாக்கெடுப்புக்கள், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் இரண்டு தடவைகள் நடைபெற்று விட்டதையும் நாம் அறிவோம்.
தவிர கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற தேசங்களும் ஈழத் தமிழரிற்கான நீதிக்கான தங்களது கரிசனையை வெளிப்படுத்தி வருவதையும் காண்கிறோம்.
ஆக, இன்றளவில், உலக விவகாரமாக சர்வதேச மயப்பட்டு விட்ட ஈழத் தமிழரின் இனப் பிரச்சினை உலக நாடுகளின் கட்சிகளின் விடயங்களாகவும் மாறி விட்டதால், கடந்த வார இறுதியில் நிகழ்ந்த கனடா லிபரல் கட்சியின் தலைமை மாற்றம் பற்றியும் நாம் கரிசனை கொள்ள வேண்டியதன் அவசிய, அவசரத்தை சமகால ராஜீகப் பார்வை மற்றும் இராஜதந்திர அணுகு முறையினூடாகவே புரிந்து கொள்ள இயலும்.
எண்ணெய் வளமும், தேசிய நலன்களும், இதர நாடுகளின் தேவைகளும், பொருளியல் நன்மைகளும் பூகோள அரசியலை நிர்ணயிக்கும் பூகோள அரசியலில், நமக்கென ஒரு இலக்கும் அதற்கான உள்ளார்ந்த திட்டங்களும் இருக்க வேண்டிய, அதே சமயம், அவற்றை எப்படி, எக்காலத்தில் எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையே இராஜதந்திர அணுகுமுறை எனலாம்.
முடிவில் மாற்றமில்லாத போதும், அதை எப்போ?, எங்கே?, யாரால்? என்ன வார்த்தைப் பிரயோகங்களின் ஊடாக, அந்த இலட்சியத்தை முழுமையாகவோ அல்லது படிப்படியாகவோ முன் வைப்பது என்பதிலேயே தந்திரமும் விவேகமும் தங்கியுள்ளன எனலாம். இதனையே இராஜதந்திர விழிப்புணர்ச்சி எனலாம்.
தூக்கத்திலிருந்து விழிப்பது வேறு, விழிப்புணர்ச்சி வேறு. இந்த தலைமை மாற்றீடு தொடர்பில் ஈழத்தவரின் ஆழமான பார்வையும் அணுகுமுறையுமே விழிப்புணர்ச்சியாகும். இதை விடுத்து, நேரடியாக நமது உடனடித் தேவை, நீண்ட கால இலட்சியம், அபிலாஜை , முடிந்த முடிவு என்பவற்றை முள்ளிவாய்க்காலுள் மடிந்த தமிழர்களின் தொகையைக் கருத்திற் கொள்ளாது அவை அனைத்தையும் ஒன்றாகவே வைத்திருப்பது இராஜதந்திரமாகவோ, விவேகமான காரியமாகவோ இருக்க இயலாது.
மற்றைய நாடுகளின் தாளங்களிற்கும், அவர்களுடைய தேவைகளிற்கும் எற்ப நாங்கள் ஆட முடியாது என்பது உண்மையான போதும், உலகத்தின் எதிர்பார்ப்புகளிற்கும், தேவைகளிற்கும் முரண்படாத வகையில் நமது தேவைகளை செம்மைப்படுத்தி வெளியிடல் அவசியமாகிறது என்பதோடு உலகின் முனைப்பிற்கு எற்ப ஆடியும் பாடியும் பால் கறப்பது அவசியமாகும்.
உலகின் பயங்கரவாத அழிப்பு வேகத்தை  இலங்கை பாவித்தே தமிழரை ஈழத்தில் அது அழித்தது. இருந்தும், உலக நாடுகளில் சில இலங்கையை இன்று கண்டித்து வருகின்ற போதும், அந்த நாடுகளுடன் சமாந்தரமாகப் பயணித்து அந்த இலங்கைக்கு எதிரான உலக எதிர்ப்பைச் சாதகமாக்கும் விவேகம் தமிழர் தேசியக் கூட்டமைப்பைத் தவிர யாரிடமும் காணப்படவில்லை.
அதற்கு கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் நிலைப்பாடு உள்ளுரில் எதிராக நின்றாலும், வெளியில் வலுவளிப்பதை நுணுக்கமாகக் கவனிக்க வேண்டும். திரு மனோகணேசனின் நிலையும் அவர்களது வதிவிட நிலையில் உகந்ததே.
ஆனால் புலம்பெயர் தமிழராகிய எங்களில் ஒரு சில அமைப்புக்கள் மட்டும் அந்தந்த நாட்டு தேசிய போக்குடன் ஒத்துப் போகையில், அனேகமான தமிழர் அமைப்புக்கள், உலக சூழ்நிலையை அனுசரிக்காது, நீதியையே கேட்க முடியாத நிலையில், ஒரு பலமான நிலையிலும், அது தடைகளற்ற அங்கீகார நிலையில் உள்ளதைப் போலவும் கோசக் கொள்கை வகுப்பை 'இன்றும்' தொடர்வது நம் இனத்திற்கு ஏதாவது நன்மைகளை அளித்தால் ஆண்டவனிற்கும் , அவர்களிற்கும் நன்றி.
நாங்கள், நமது கைகளைக் கட்டிப் கொண்டிருந்து கொண்டு, என்ன நடக்குது என்று பார்ப்போம் என்று காத்திருக்கும் நம்மவரின் மடைமையும், உலகம் ஏற்க மறுதலிக்கும் பாதையில், தடைகளை நீக்கவோ, தவறான புரிதல்களை மாற்றி உண்மையை உணர்த்தவோ பல வழிகள் இருந்தும், அதற்காக எதுவித முனைப்பையும் மேற்கொள்ளாது 'எங்கள் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம்' என்றபடியோ, கப்பலில் தீர்வு வந்து ஒரு நாள் இறங்கும் என்றோ அல்லது தலைவர் ஒருநாள் வருவார் எனக் காத்திருப்பதும் விவேகமாகாது.
எனவே இயலுமானவரை கூடுதலான உலக அரசுகளினதும், எதிர்க்கட்சிகளினதும் ஆதரவை தக்க வைப்பது ராஜீக அவசியமாகும்.
இந்தளவு விடயங்களையும் மனதிலிருத்தியவாறு இனி லிபரல் கட்சி தலைமைத்துவ மாற்றத்தின் விளைவுகளை ஈழத் தமிழர் கோணத்திலிருந்து பார்ப்போம். வழமையை மட்டும் தழுவி நழுவித் தப்பிக் கொள்ளும், மரபை விட்டு விலகி, உயிராபத்தான இன அழிப்பு நிலையில் மூழ்கும் கட்டத்தில், ஒரு துரும்பு கூட அகப்படாத நிலையிலும் கைகளை உயர்த்தி அடித்து ஏதாவது மிதக்க அகப்படாதா என ஏங்கும் நி;லைக்கு ஒப்பான தருணத்தில், அடுத்த தடவையோ அல்லது அதற்கு அடுத்த தடவையோ கனடாவில் ஆட்சி அமைக்கவுள்ள லிபரல் கட்சியின் தலைமைத்துவ மாற்றத்தை உன்னிப்பாக அவதானித்தே தீர வேண்டும்.
இதை விடுத்து, இது கனடா விடயம் இதற்குள் தாயகப் பிரச்சனையை தொடுக்காதீர்கள் என யாராவது ஒரு ஈழத் தமிழன் கூறுவானேயானல் அவன் ராஜீக விழிப்புணரச்சி பெற வேண்டியவனாவான்.
ஏனென்றால், அமெரிக்கா போன்ற பலமான வல்லரசுகளே தமக்கு சாதகமாக தூர கிழக்கு நாட்டு அரசுகள் கூட அமைய வேண்டும் என எதிர்ப்பார்க்கும் நிலையில், நட்டாற்றில் நீதியைக் கூடக் கேட்க இயலாது, தவிக்கும் புலம்பெயர் ஈழத் தமிழினம் அதிகமாக வாழும் கனடாவை அதிக காலம் ஆண்ட லிபரல் கட்சியின் தலைமை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை என்றால், இப்படியானவர்களாற் தான், ஏன் இன்றே இந்தியா உலகில் எங்கும் தமிழரிற்கென ஒரு ஆட்சி அமைந்து விடக் கூடாது என அஞ்சுவது புரியாதிருப்பதற்கான விளக்கமாக அமையும்.
நம்மவரிற்கு ஒரு விடயத்தை புரிய வைக்க, ஒரு உதாரணத்தை காட்டி பின் அதனை எற்கவும் புரியவும் வைக்க இன்னும் பல சிறிய உதாரணங்களைக் காட்ட வேண்டிய ஒரு அரசியல் இராஜதந்திர வரட்சி நம்மிடையே ஒரு பாரிய பிரச்சனையாக உள்ளது. அதனாற் தான் ஜேக்ஸ்பியரின் நாடக நீண்ட முன்னுரைகள் போல் பல முன்தரவுகளை நினைவூட்ட வேண்டியுள்ளது.
இனியாவது தலையங்கத்திற்கு வந்தால், முதலாவதாக திரு யஸ்ரின் திறிடோவிற்கு கனேடியர்கள் 'முடி' சூட்டி பட்டாபிசேகம் செய்துள்ளார்கள் என்றே கூற வேண்டும். இங்கே பாவிக்கப்பட்டுள்ள 'முடி' என்பது குடியாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் அதிகம் சாதகமற்றது என்பதை நான் நினைவூட்ட வேண்டுமே ஒழிய விளக்க வேண்டிய அவசியமில்லை.
முடியாட்சியில் தான் அரசனின் மகனிற்கோ மகளிற்கோ அரச பரம்பரை வாரிசு அடிப்படையில் பட்டம் கட்டுவது முடியாட்சி வழமை. குடிகளின் ஆட்சியில் ட்டலிக்கு பின் ருக்மன் சேனநாயக்காவை தள்ளி ஜே ஆர் வந்ததைப் போலவும், அதன் பின் பிரேமதாசா வந்ததைப் போலவும் பரம்பரை முக்கியத்துவம் பெறக் கூடாது.
ஆனால் உலகில் நிலவும் தலைமைத்துவப் பஞ்சம் காரணமாக, கனடாவின் பிரதமர்களில் இராஜதந்திரம் மிக்க ஒரு அதீத தலைவரின் மகனை லிபரல் தேடியது மட்டுமன்றி, தரமான திரு பொப் றோ அவர்களை அது தவிர்த்திருக்கிறது என்பதே உண்மை.
இதே தவிர்த்தலிற்காகவே, ஏட்டுச் சுரைக்காய் போன்ற திரு இக்கினாற்றிவ்வை அமெரிக்காவிலிருந்து அன்று லிபரல் இறக்குமதி செய்தது. இது லிபறல் இன்னும் உண்மையில் 'லிபறேற்' பண்ணப்படவில்லை என்பதை காட்டுவது ஒரு புறம் இருக்கட்டும்.
இந்த 'இக்கி' லிபரல் கட்சிக்கார்களிற்கு மட்டுமன்றி, முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது ஈழத் தமிழரிற்கும் பேரிடியைக் கொடுத்தவர் என்பதை கனடாத் தமிழினம் மறந்து போனதை விட, இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழா வண்ணம் பார்க்க வேண்டிய தேவைகள் பற்றி சிந்திக்க வைப்பதே இந்த எழுத்துக்களின் நோக்கமாகும்.
சரி, மடிந்தது தான் நடந்து முடிந்து விட்டதென்றால், ஐநா வே மன்னிப்புக் கேட்ட பின்னராவது நமது புலம்பெயர்ந்த அமைப்புக்கள் புலிகள் இயக்க பெண் சுதந்திரப் போராளிகளை மிகவும் கேவலாமாகக் கொச்சைப் படுத்திய இந்த 'இக்கி' தொடர்பில் ஜனநாயக ரீதியில் கருத்து வெளிப்பாடு எதையும் செய்ததா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.
லிபரலின் பலமான ஆதரவு அறிக்கைகளுடன் ' ஸ்ரே எவே புறம் ரமில்ஸ் டொமென்ற்றேஜன ' என லிபறல் பாராளுமன்ற உறுப்பினரிற்கு எழுதித் தடுத்ததை அன்று கனடா உதயன் வெளியிட்டதை நினைவு படுத்தி மேலே தொடர்கிறேன்.
அதாவது மே 2009 இல் கனடாப் பாராளுமன்றத்திற்கு முன் கூடிய தமிழரை சந்திக்க விடாது தவிர்த்த கட்சித் தலைமை பற்றி லிபறல்க் கட்சி சரி, புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சரி எதையுமே ஜனநாயக ரீதியிற் கூடச் செய்யவில்லை.
முன்பு என்ன நடந்தது? இப்போ நிஜத்தில் நிலத்தில் என்ன நடக்கிறது, நாளை என்ன நடக்கும் என்பதை கருத்திற் கொள்ளாது வகுக்கும் நமக்கான எந்தத் திட்டமும் நகராத நம்மவர் நிகழ்ச்சி நிரல்களும் வெறும் கோசங்களே ஒழிய அரசியலோ அரச தந்திரமே அல்ல.
தசரதனை விடச் சிறந்த இராமனிற்கு முடி சூட்டுவது ஜனநாயகத்தை விட திறமான, திறமையான செயலாகும். ஆனால் விமான விபத்தில் திரு சஞ்சய் காந்தியும் மறைந்த நிலையில், விமான ஓட்டி திரு ராஜீவை அரச கட்டிலேற்றியது ஜனநாயக குடியாட்சிக்கு முரணானது மட்டுமன்றி, போதிய அறிவும் அனுபவமும் அற்ற ஒரு பேதமை மிக்கவரை பொறுப்பில் அமர்த்தியமைக்கு சமனாகும்.
இதே போன்ற இன்னொரு காரியமே திரு ராகுலை இழுத்து முடி சூட்டுவதாகும். எனறாலும் இவை யாவும் அனுரா பண்டாரநாயக்கா நியமனத்தை விடப் பரவாயில்லை என்ற நிம்மதியைத் தவிர வேறு ஆறுதல் எதுவுமில்லை.
உண்மையில் லிபரல் கட்சியுள் 'பொப் றே' என்ற ஒரு கரத்து வீச்சுக் கதிர்த் தலைமை இருந்தும், முதற் தடைவ திரு இக்கினாற்றிவ்வை இறக்கியும், இத் தடைவ இந்த கனடா ராகுலை களமிறக்கியும் பொப் றேயை தவிர்த்திருக்கிறது லிபறல் கூட்டம். புதிய தலைமையிடம் அழகு காணப்படுகிறதே ஒழிய ஆழம் காணப்படவில்லை.
பலமான உரத்துப் பேசும் போது கூட, அந்த துடிப்பான வேகம் புலப்படவில்லை. ஒபாமாவின் முதற்தடவைக் கோசமான மாற்றம் என்பதையும், இரண்டாவது தடைவ எழுப்பிய 'மிடில்க் கிளாஸ்' வாக்கிழுப்புமே தென்பட்டன. இது உலகில் நிலவும் தலைமைப் பற்றாக் குறையின் இன்னொரு விளைவான இழுத்து வருதல் என்றே கூற வேண்டும்.
திரு இக்கி அவர்களை அமெரிக்க நபர் என அன்று பலரும் பார்த்ததால், இன்று லிபரல் உள்ளிருந்தே ஒருவரை ஈர்த்திருக்கிறது அவ்வளவு தான். இவர் வெளிநாட்டவர் மற்றும் குடிவரவாளர்களின் தாயக சிக்கல்கள் தொடர்பாக எவ்வளவு தூரம் கரிசனையை வெளிப்படுத்துவார் என்பதே நமக்கு தேவையான அம்சமாகும்.
ஈரானில் சதாம் ஹுசெயினையும், லிபியாவில் கேணல் கடாபியையும் ஒழித்து விட்ட பின்னர் அங்கெல்லாம் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதே உண்மை. இதற்குக் காரணம் உலகளாவிய தலைமைத்துவப் பஞ்சமே. இந்தநிலையில் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற நிலைப்பாடு தொடர்ந்தால் நமது மூன்றாவது ஐநா மனித உரிமைச்சபை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியோடு மேலே செல்வோம்.
உலகளாவிய தலைமைத்துவப் பஞ்சங்களிற்கு பல் வேறு காரணங்கள் இருந்த போதிலும், இரண்டு அம்சங்களை பிரதானமான காரணமாகக் கருதலாம். முதலாவதாக, தலைமைத்துவத்திற்கு கற்றை நெறிகள் இருந்தாலும் தலைமைத்துவ 'ஆற்றலை' யாரிடமும் எந்தப் பல்கலைக்கழகமும் ஒப்புவித்து விட முடியாது என்பதைக் கூறலாம்.
இரண்டாவதாக கணிதம், பௌதீகம் போன்ற இயற்கை விஞ்ஞானங்களில் உள்ளது போல் இத் துறைகளிற்கான சிக்கல்களிற்கு கணிப்புச் சூத்திரங்கள் கிடையாதென்று ஒப்பீட்டளிவில் கூற முடியும்.
அதாவது, 'அரசியல் ஞானம்' என்பது தகவற் கல்விக்கும், கல்வி அறிவிற்கும், அறிவுத் திறமைக்கும் அப்பாற்பட்ட ஒரு இயற்கை ஆற்றலாக காணப்படுவதே இதற்கான முதலாவது காரணமாகும். இதனாற் தான் தலைவர்களும், சிந்தனையாளர்களும் உருவாக்கப்படுவதில்லை, அவர்கள் பிறக்கிறார்கள் என்று கூறப்படுவது வழக்கம்.
டாக்டர் எம் ஜி ஆரும், கிங் மேக்கர் காமராஜரும் எதையுமே அதிகம் கற்றவர்கள் அல்ல. இருந்தும், கற்காமலே வெற்றிகரமான தலைவர்களான இருந்தவர்கள். மாநில மற்றும் தேசிய மட்ட நிர்வாகிகளையும் (அட்மினிஸ்றேற்றர்) , முகாமையாளர்களiயும் (மனேஜர்) . இலாவகமாகக் கையாண்ட தலைவர்கள் (லீடர்) இவர்கள்.
முடியரசு குடியரசான ஆரமபத்தில் ஒரு தேசத் தலைமைக்கு வரலாற்று மற்றும் சட்ட அறிவுகள் போதுமானவையாக காணப்பட்டன. பின்னர் அதனுடன் பொருளாதாரமும், நிர்வாக அறிவும் சேர்ந்து கொண்டன. இன்றோ அணு ஆயுதங்கள் பற்றியும் கூடப் புரிந்துணர்வுடையவர்களே தேசிய பாதுகாப்பு ஆலோசனைக்கு கூட தேவைப்படுகின்றனர்.
இந்தத் தகைமைகள் இல்லாத வெற்றிடங்களில் தான் புலனாய்வில் இருந்து குறை நிரப்பிகள் இழுத்து வரப்பட்டனர். இதற்கு இந்தியா கூட விதி விலக்கல்ல. சிறீலங்கா ஊடகத் துறையைச் சேர்ந்த சிலரை வளர்த்தெடுத்தது எனலாம்.
மேற்கைத்தைய நாடுகளிலோ ஒரு பூரண ஊடக சுதந்திரம் நிலவுவதும், ஊடகவியலாளர்களும், தீர்க்கதரிசனமும், ராஜீகப் பார்வை கொண்டவர்களாகவும் இருந்து முன் கூட்டியே கருத்தக்களை வெளியிடுவது தலைமைகளிற்கும் , நிர்வாகிகளிற்கும், வாக்காள வாசகர்களிற்கும் உதவியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் வரும் தலைவரிற்கு இயல்பாகவே ராஜ தந்திரமும் இயல்பாக இருக்குமாயின் நாட்டில் பல சிக்கல்கள் தோன்ற வாய்ப்பே இருக்காது.
மேற்குறிப்பிட்ட ஊடக சுதந்திரம் அமெரிக்காவில் உள்ள அளவு இந்தியாவில் இல்லை என்பதோடு காலக் கிரமத்தில் தேர்தல் நடைபெறுவதைத் தவிர அங்கு போலி சமஸ்டி அரசியலமைப்பே வழக்கில் உள்ளது. இன வாத முடிவுகளை இராஜதந்திர முடிவுகள் என்ற போர்வையுள் அமுலாக்கியும் விடுகிறார்கள்.
தவிர, இந்தியாவின் தற்போதைய பிரதமரான மாண்புமிகு பொருளியல் டாக்டர் திரு மன் மோகன் சிங் அவர்களிடம் எள்ளளவும் தலைமைத்துவம் இருப்பதாக யாரும் கணிப்பதாகத் தெரியவில்லை. அவர் ஒரு பொருளாதாரச் சிற்பி என்பதுடன் ஒரு சிறந்த நிர்வாகி என்று மட்டுமே கூற இயலும்.
இதனால் உடனடியாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஈழத் தமிழர்களும், தமிழக மீனவர்களும் தான். இனிப் பாதிக்கப்படப் போவது இந்தியத் தேசியமும் முழு இந்தியாவுமே. ஆனால் அன்னார் ஒரு பெரிய கல்விமானாக இருந்தும் தனது இயலாமையை இனங் காணவில்லையோ அல்லது ஒத்துக் கொள்ளும் பக்குவம் இல்லையோ தெரியவில்லை.
அண்மைக் காலங்களில் வெளியான அவரது கீழ் வரும் இரண்டு வாக்கு மூலங்களையும் கவனியுங்கள். திரு ராகுல் காந்தி அவர்கள் இப்போ வேண்டுமானாலும் பிரதமராக நான் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்பதோடு ஒரு கூட்டரசாங்கத்தை நகர்த்துவது கடினம் என்பது இரண்டாவதானதாகும்.
தன் நாட்டு மக்களை காக்கும் அடிப்படைப் பொறுப்பிலும், நீதியாக முடிவு எடுத்தலிலும் , தான் எங்கோ தவறு விடுவதையோ, போர்க் குற்ற விசாரனைக்கு கூட அழைக்கப்பட வேண்டியவர் தான் என்பதை அவரது மனச்சாட்சியே உறுத்துகிறதோ என்னமோ, இந்த இரண்டு வாக்கு மூலங்களும் கடந்த வாரம் வெளியாகியிருந்தன.
காமராஜர் மற்றும் அறிஞர் அணணாவிற்குப் பின்னர் இந்திய சர்வ தேச விவகாரப் பரிச்சயமற்றவராகவே மாநில மட்டத்தில் கலைஞரும் காணப்பட்டார். இன்றைய செய்தியில் தற்போதைய தமிழக முதல்வரையும் புத்தியுடையவரல்ல என்றே தென் இலங்கை அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால் செல்வி ஜெயலலிதா தயக்கமின்றி விவேகமாக நகர்வதாகத் தெரிகிறது. உணர்ச்சி வசத்தில் எழுபவை ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் என்றால், அறிவில் எழுந்து, ஞானத்தினால் மிளிர்வது அரசியலாகும். அத்தோடு தீர்க்கதரிசனமும் தந்திரமும் சேரும் போதே ராஜீகம் கைகூடுகிறது.
இதனை இங்கு குறிப்பிடுவதற்கு கனடாவில் தேசியப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட கௌரவ செல்வி ராதிகா சிற்சபேசன் அன்மையில் ரொறன்ரோ தமிழ்க் குழுக்களின் அடாவடித் தனங்களால், விரக்தியடைந்த நிலையில் அளித்த செவ்வியே காரணமாகும்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தொலைபேசியில் அழைத்து ஏன் அந்த நிகழ்ச்சிக்கு போனாய்? எங்களிடம் கேட்காது ஏன் போனாய்? போன்ற கேள்விகள் மிரட்டல் பாணியில் கேடகப்பட்டதாக அந்தச் செவ்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றுச் சாதனை படைத்த எங்கள் இந்தத் தமிழ்ப் பெண் பிள்ளையை இவர்கள் இப்படி நடாத்துவதும் வருத்துவதும் ஜனநாயக விரோதமானதும், இன ஆரோக்கியமற்றதும் ஆகும். அடுத்த தடவை ஒரு தமிழர் தெரிவாவதை தடுக்கும் செயற்பாடாகும்.
எனவே தான் போராட்டத்திற்கும் , அரசியலிற்கும் , ராஜீகத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் கோடிட்டுக் காட்டவும் வேண்டியேற்பட்டது. இவர்களது மிரட்டல்களை , கனடா அரசும் காவற் துறையும் புலனாய்வுத் துறையும் வன்முறையாக கணிக்கவும் பயங்கரவாதமாகச் சந்தேகிக்கவும் எவ்வளவு நேரமாகும்? புலிகளிற்கு மட்டுமன்றி தலைவரிற்குமே சர்வதேச அறிவில்லை என்று எரிக் சொல்ஹெய்மும் கூறியிருந்தார்.
ஒற்றுமையாக இருந்த போது தமிழகத் தலைவர்கள் அரசியற் கோமாளிகள் என்று சிறீலங்காவின் அன்று அரசியல்வாதியாகாத இராணுவத் தளபதி திரு சரத் பொன்சேகா கூறியிருந்தார். இவர்கள் எல்லாம் இப்படிக் தயங்காது கூறுவது பற்றி தமிழ் பேசும் நல் உலகே சிந்திக்க வேண்டும்.
குறிப்பாக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிறந்த இராஜதந்திரத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இந்தக் குழுக்களின் தேவையும், இலட்சியமும், கொள்கையும் ஒரே மாதிரியானவையாகவே உள்ளன. தந்திரம் மிக்கவையாக அவை வடிவமைக்கப்படவேயில்லை. தவிர தமிழரின் சாதனை  என்று கருதப்பட்ட கெளரவ ராதிகாவின் வெற்றியை அவை கொச்சைப்படுத்துவதுடன் தமிழரின் ஜனநாயக பாராம்பரிய விழுமியத்தையும் இந்தக் கேள்விகள் களங்கப்படுத்துகின்றன.
எனவே கேள்விகள் ஜனநாயகத் தன்மையுடையனவாயும் ,நாட்டிற்கு நாடு வேறுபட வேண்டிய வெளிக் கொள்கை வெளிப்பாட்டு அம்சங்களை அடக்கியதாகவும் , உலக அமைப்பையும், இன்றைய ஒழுங்கையும் கருத்திற் கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பது உணரப்படவேயில்லை. எல்லா நாடுகளும் , சர்வதேச தளத்திற்கும், பூகோள அரசியலிற்கம் எற்ப தங்கள் தங்கள் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்து நகர்கையில் வெளியுறவுக் கொள்கை என எதுவுமே இல்லாத ஒரு கிராமச் சங்கம் போல இவை அமைந்துள்ளன.
தவிர, கொள்கை மற்றும் இலட்சியங்களில் எதுவித வேறுபாடுகளும் இல்லாத போதும் , அவரவரும் நிதி சேர்க்கவோ அன்றில் பதவிகளிற்காகவோ தனித் தனியாக இயங்கும் இக் குழுக்களுள், எந்தக் குழுக்கள் இந்த முறைகேடுகளைச் செய்தன என்பது வெளிப்படையாகக் கூறப்படவில்லை.
இதனால் கண்ணியமாக இயங்கும் குழுக்களும் , இவ்வாறு பேசக் கூடியவர்களை துண்டில் இலக்கங்களை அழகாக எழுதிக் கொடுத்த முறையால் வெற்றி பெற வைத்த தேர்தலை ரத்துச் செய்யாத காரணத்தால் உள்ளே கொண்டுள்ள அமைப்பும் கூட அவப் பெயரிற்கு உள்ளாகின்றதோ தெரியவில்லை.
கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இத்தகைய தரச் செயற்பாடுகள் செம் மொழி பேசும் தமிழர்களாகிய எங்களை, வேதனைப்பட மட்டுமல்ல வெட்கப்படவும் வைக்கின்றன. இது பற்றிய விரிவான செய்தி வெளிப்பாடு கூட இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா தமிழ் எம் பி ஒழிய தமிழர்களின் எம் பி மட்டுமல்ல, அவரது தொகுதியில் 80 வீதமானோர் தமிழர்கள் அல்ல. அவர்களிற்கான பணிகளையும் , கடமைகளையும் நிறைவேற்றும் பாரிய பொறுப்பு கௌரவ ராதிகாவிற்கு உண்டு என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவரிற்கு வேண்டிய உண்மையான தகவல்களையும், திருத்தமான தரவுகளையும் வழங்க எந்தத் தமிழ் அமைப்பாவது உதவுவதாக அறிய முடியவில்லை.
இவ்வாறே இன்று , அதாவது ஏபற்ல் 14 ம் திகதி தெரிவு செய்யப்பட்ட லிபறல்க் கட்சியின் கனடாத் தலைவர் முழுக் கனடாவிற்கும் உரியவர். நீண்ட காலம் கனடாவை ஆண்ட கட்சியான போதும் , தலைமைத்துவப் பஞ்சத்தால் ஆட்சிக்கு வர இயலாது தவறிய லிபறல்க் கட்சியை தூக்கி நிறுத்த தெரிவு செய்யப்படடவர்.
இருந்தாலும் , ஆளும் கட்சியின் பிரதமரான திரு ஸ்ரீபன் ஹாபர் அவர்கள் ஈழத் தமிழரின் நியாயத்திற்காக குரல் கொடுத்த காரணத்தினாலும், ஒரே கட்சியைச் சார்ந்திருந்தாலும் ஆள் மாற்றம் பாரிய பாதகங்களை ஈழத் தமிழர் தொடர்பான சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தி வந்ததின் காரணமாகவும் புதிய லிபரல் தலைமை எவ்வாறு ஈழத் தமிழர் விவகாரத்தை கையாளும் என தமிழர்கள் சிந்திப்பது இயல்பானது மட்டுமல்ல ராஜீக ரீதியிலானதுமாகும்.
ஒரு தரமான தலைவரின் வாரிசு என்பதாலோ, மக்களின் கண்களிற்குள் ஜொலிக்கக் கூடியவர என்பதாலோ இழுத்து வரப்படுபவர்களிடம் சுய ஆற்றலும் இராஜ விவேகமும் இருக்க வேண்டும். தவிர கற்றல் அறிவு தலைமைத்துவத்திற்கு போதுமானதாயின் இன்றளவில் முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு இந்தியத்தின் இமாலயத் தடையையும் தாண்டி, போர்க்குற்ற விசாரணையாவது நடந்திருக்கும்.
அரசியலிற்கும் எட்டாத் தொலைவில் உள்ள கொள்கை வகுப்பு இராஜதந்திர ராஜீக மட்டங்களில் நம்மவர் இன்மையையே இங்கு நான் சுட்டுகிறேன். இத்தனை ஆயிரமாயிரம் படுமோசமான கொலைகளிற்கு எப்படி நீதி கேட்பது என்பதைக் கூட கண்டு கொள்ள இயலாத அளவில் நமது புலம் பெயர் கற்றவர்கள் எனப்படுவோர் நிறைந்த தமிழ்ச் சமூகத்தில், சமூக விஞ்ஞானிகளினதும், சிந்தனையாளர்களினதும், கொள்கை வகுப்பாளர்களினதும், ஊடகவியலாளர்களினதும் சர்வதேச மட்டத்திலான பஞ்சத்தையே நாமின்று அனுபவிக்கிறோம்.
எனவே இம்மாதிரியான சிந்தனை ஓட்டமுள்ள விளக்கமள்ள ஒரு பாரிய தமிழர் பட்டாளமே வெளிநாடுகளில் தங்கள் பாட்டைப் பார்த்தவாறு நகர்கின்றது. ஆனால் ஒரு சிறு வீதத்தினரான இன அபிமானிகள் மட்டும் தொடர்ந்தும் இயங்குகின்றனர். அதிலும் ஒரு விகிதத்தினரை இன உணர்ச்சி வயப்படுத்தி ஒரு நிலையில் வைத்துக் கொள்ளும் பாணியிலேயே அனேகமான குழுக்கள் உள்ளன. அதற்கேற்ப கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற சில கோசங்கள் எழுப்பப்படுகின்றன.
இதை எல்லாம் மீறி, ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள விளக்கமுள்ள கூட்டம் விழிப்பதுடன் விழிப்புணர்ச்சியும் பெற்றால் அன்றி விரையும் இன அழிப்பு நிலப்பறிப்பு இனக் கலப்பு அழிப்பு தடைப்படாது. ஒரு வேளை வாக்கெடுப்பை வைத்தாலும் குடியேற்றப்படும் தென் இலங்கை வாக்குகளால் நாம் ஏமாற்றப்படக் கூடும்.
எனவே ஏமாற்றத்தையும் வேதனையையும் தவிர்க்க வேண்டுமாயின் நாம் நம்புவதையும் தவிர்க்க வேண்டும்.


அமெரிக்காவுடன் இலங்கையின் உறவு என்ன? "லவ்வா? இழவா?" - மனோ கணேசன்! -- அமைச்சர் தொண்டமானுக்கும் அறிக்கை
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 10:17.18 AM GMT ]
உள்நாட்டில் அமெரிக்காவை எதிர்த்து, அவர்கள் கொண்டு வந்த தீர்மானங்களை கணக்கிலும் எடுக்க மாட்டோம் என அமைச்சர்கள் ஜி.எல். பீரிசும், கெஹெலிய ரம்புக்வலவும் வீரம் பேசுகிறார்கள்.
ஆனால், அமெரிக்க அரசை கவர ஒரு மாதத்திற்கு 116,000 டாலர்களை செலவழித்து நமது அமெரிக்க தூதுவர் விக்கிரமசூரியவும், மத்திய வங்கி ஆளுநர் கப்ராலும் அமெரிக்க தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
அதேவேளை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் மிச்செல் சிசன், இலங்கை தொடர்பாக மிகவும் கறாராக பேசியுள்ளார்.
உண்மையில் இலங்கை, அமெரிக்க அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு என்ன? அது சண்டையா? சமாதானமா? "லவ்வா, இழவா" ? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும்.
அதேபோல் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவரும் பதில் கூற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுவோம் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் மிச்செல் சிசன், இலங்கை தொடர்பாக முக்கியமாக பேசியுள்ளார்.
2012ம் ஆண்டிலும் 2013ம் ஆண்டிலும் நிறைவேற்றப்பட ஐநா மனித உரிமை மன்ற தீர்மானங்கள் பற்றியும், அவை தொடர்பில் இலங்கை அரசு செய்ய வேண்டிய மற்றும் செய்ய தவறிய காரியங்கள் தொடர்பிலும் அவர் பேசியுள்ளார்.
கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல் செய்ய இலங்கை அரசு உருவாக்கி அறிவித்த மனித உரிமை செயற்திட்டம் தொடர்பிலும் பேசியுள்ளார். இவை இலங்கை அரசாங்கத்துக்கு எதிரே இன்று இருக்கின்ற சர்வதேச கடப்பாடுகளை ஞாபகப்படுத்துகின்றன.
இவற்றை இலங்கை அரசு செய்யாவிட்டால் ஆபத்து காத்திருக்கிறது என்று அமெரிக்க தூதுவர் மறைமுகமாமாக சொல்லுகிறார்.
இதன்மூலம் அவர் இலங்கை அரசுக்கு பூச்சாண்டி காட்டுகிறாரா அல்லது தமிழ் மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறாரா என்பது விரைவில் தெரிய வரும்.
ஆனால், ஐநா தீர்மானங்களை தாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள போவதில்லை என பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார். நேற்று இதையே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வலவும் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் சொல்வதை கேட்கும் தேவை எமக்கு இல்லை என்று சொல்லி, அமெரிக்காவை நிராகரித்து இவர்கள் இலங்கை மக்கள் முன்னாள் பேசுகிறார்கள்.
ஆனால், அமெரிக்காவில் என்ன நடக்கிறது? வெளிவிவகார அமைச்சர் பீரிசுக்கும் தெரியாமல் பெருந்த

Geen opmerkingen:

Een reactie posten