[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 11:04.34 AM GMT ]
இவ் விடயம் தொடர்பாக அறியவருவதாவது
களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பொலிசால் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் போது கையொப்பமிடும் புத்தகம் நேற்று மாலை குறித்த இடத்தில் இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்திக் கிடந்துள்ளது.
இவ்விடத்திற்கு கடமைக்கு வந்த பொலிசால் இதனைக்கண்டு ஆத்திரமடைந்து கடை அருகிலிருந்த ஐந்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் இளைஞர்களிடம் இக்காரியத்தினை யார் மேற்கொண்டது எனக் கேட்டு பொல்லுகளாலும் தடிகளாலும் தாக்கியுள்ளனர்.
இவ்வாறு தாக்கிவிட்டு இத்தாக்குதல் தொடர்பில் யாரிடமாவது கூறினீர்கள் என்றால் நடக்கிறதே வேறு எனவும் தாக்குதல் நடாத்திய களுவாஞ்சிகுடி பொலிசால் தாக்கப்பட்ட இளைஞர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
அனைத்து தரப்பும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாகவே தீர்வு காண முடியும்!- இந்தியா
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 07:12.14 AM GMT ]
தமிழர்களின் தீர்வு விடயத்திலும், மீனவர்களின் பிரச்சினை தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் மூலமே அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மணிசங்கர் ஐயர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
எனினும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் சுய அரசியல் லாபங்களுக்காக காங்கிரஸ் அரசாங்கத்தை குறை கண்டு வருகிறது.
அனைத்து தரப்பினரும் இணைந்து முழுமையான பேச்சவார்த்தையில் ஈடுபடுவதன் ஊடாகவே இலங்கை தமிழர்களின் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten