தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 april 2013

பொதுநலவாய மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றம் !


பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிலிருந்து இருந்து இலங்கையை நீக்குமாறு, பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது
நேற்று தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பொது நலவாய நாடுகளின் சட்டத்தரணிகளது மாநாட்டின் போது இந்த தீhமானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் அமைப்பு, நீதிபதிகள் அமைப்பு மற்றும் கல்வி ஒழுங்கமைப்பு என்பன இணைந்து இந்த தீர்மானத்தை தாக்கல் செய்திருந்தன.
இதில் தொடர்ந்து பல்வேறு வன்முறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இலங்கையை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறான குற்றச்சாட்டுகள் நிறைந்த நாட்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவது, தமது கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்படும் தன்மைமையை ஏற்படுத்தும்.
எனவே நொவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை வேறு இடத்தில் நடத்துவது தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஆலோசிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ள பொதுநலவாய அமைச்சர்களின் செயற்பாட்டு குழு கூட்டத்தின் போது இலங்கை விடயம் தொடர்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten