தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 april 2013

நாவற்குழி குடியேற்றம்! தமிழ் - சிங்கள உறவுக்கு பாதிப்பு என்கிறார் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்!


கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட வர்த்தகரின் வான் வவுனியாவில் கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 09:02.19 AM GMT ]
கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான அதி சொகுசு வான் ஒன்றை  வவுனியா கோவில்குளத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்பனித்தெருவில் வைத்து கடந்த 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட இந்த வான் நேற்று செவ்வாயக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் பலனாக வவுனியாவில் வைத்து அவ் வானை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார ஜெயதிலக மற்றும் பொலிஸ் பரிசோதகர் சிறிவர்த்தன தலைமையிலான குழுவினரே இக் கடத்தல் சம்பவத்தை கண்டறிந்துள்ளனர்.
அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேக நபர்கள் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தொவித்தனர்.

நாவற்குழி குடியேற்றம்! தமிழ் - சிங்கள உறவுக்கு பாதிப்பு என்கிறார் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 09:16.17 AM GMT ]
நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் காரணமாகத் தமிழ் - சிங்கள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இது தற்போது பயங்கரச் சூழலை தோற்றுவித்துள்ளதாகவும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் தெரிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான நாவற்குழியிலுள்ள காணியில் தமிழ் - சிங்கள உறவைப் பிரிக்கும் வகையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன  என்றார் அலென்ரின்.
குருநகர் தொடர்மாடி குடியிருப்புப் புனரமைப்புப் பணிகள், வீடமைப்பு மற்றும் நிர்மாணப் பொறியியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸவினால் நேற்று  ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன் பின்னர் உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது
நாவற்குழியில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் தென்பகுதியிலிருந்து வந்த 80 சிங்களக் குடும்பங்கள் வரை அத்துமீறிக் குடியேறி அதில் நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கருகாமையில் தமிழ் குடும்பங்களும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் தங்கியுள்ளன.
இதற்கு அருகில் உள்ள சீருடையினர் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணி தமக்கே உரியது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த காணியில் பயங்கரமான சூழ்நிலை தற்போது இருந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் குறிப்பிட்டார்.
தமிழ் - சிங்கள உறவைப் பாதிக்கின்ற வகையில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. இது தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்சவுடன் கலந்துரையாடவுள்ளேன் என்றார்.
இதேவேளை நாவற்குழியிலுள்ள சிங்கள குடியேற்றங்களுக்குப் பொறுப்பானவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் மல்காந்தி, நிகழவின் முடிவில் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் மனுவொன்றைக் கையளிக்க முயன்ற போதும் அமைச்சர் விமல் வீரவன்ச பின்னர் பார்த்துக் கொள்வதாகக் கூறிச் சென்றார்.

Geen opmerkingen:

Een reactie posten