தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 april 2013

மனித உரிமை கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டை அவுஸ்திரேலியா நிராகரிப்பு


அசாத் சாலியிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 02:29.50 AM GMT ]
முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி நேற்று குற்றப் புலனாய்வு தரப்பினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இன வன்முறைகளை தூண்டும் வகையில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதாக கூறி, அவருக்கு எதிராக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் முஸ்லிம் மக்களிடையே இன வன்முறையை ஏற்படுத்தும் வகையிலான குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆங்கில ஊடகம் ஒன்றின் ஆசிரியர், இவ்வாறு 17 குறுஞ்செய்திகளை அனுப்பி இருப்பதாகவும், அவர் தொடர்பான தகவல்களையும் அசாத் சாலியிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனித உரிமை கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டை அவுஸ்திரேலியா நிராகரிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 02:32.09 AM GMT ]
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் அவுஸ்திரேலிய அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கையில் இருந்து செல்லும் அகதிகளின் உரிமைகள் மீறப்பட்டு வருவதாகவும், அங்குள்ள அகதிகள் தங்களுக்கான சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தி இருந்தது.
எனினும் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பிரென்டன் ஓ கொன்னர் இதனை மறுத்துள்ளார்.
சட்டத்தரணிகள் இலங்கை அகதிகளின் சார்பாக முன்னிலைப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவுக்குள் நுளையும் அதிகளை உடனடியாக திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten