தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 april 2013

அமெரிக்க குண்டு வெடிப்புச் சம்பவம்! அல்கெய்தா இலங்கையின் தொடர்பு கசிந்தது!


அல்-கைதா இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க பொஸ்டன் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என அறிவதற்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் குறித்து ஆராயப்பட வேண்டும் என ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக WND என்ற சர்வதேச இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பொஸ்டன் தாக்குதலுடன் அல்-கைதா மற்றும் ஹிஸ்புல்லாஹ் குழுவிற்கு தொடர்பு இருப்பதாக அந்த இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷில் உள்ள பலருக்கு அல்-கைதா மற்றும் ஹிஸ்புல்லாஹ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அல்-கைதா மற்றும் சன்னி முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களில் இருப்பவர்கள் ஹிஸ்புல்லாஹ் குழுவிற்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இணைந்து செயற்பட்டவர்களே பொஸ்டன் குண்டுத் தாக்குதல் நடாத்த அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல்கள் மரதன் ஓட்டம் முடியும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டமைக்கு காரணம் அனைத்து ஊடகங்களும் அவ்விடத்தில் ஒன்றுகூடியிருந்தமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொஸ்டன் குண்டுத் தாக்குதலுடன் இஸ்லாமிய தலைமை குழுவொன்றுக்கு தொடர்பு இருப்பதாக ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அமெரிக்காவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் இடம்பெறும் என இரண்டு மாதங்களுக்கு முன் இஸ்லாமிய தீவிரவாத தலைவர் ஒருவர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த புலனாய்வுத் தகவல்கள் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் குண்டுவெடிப்பு விசாரணை இன்னும் முழுமை பெறாததால் குறித்த புலனாய்வுத் தகவல்களை உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ள தகவல் உண்மையாக இருப்பின் பொஸ்டன் குண்டுத் தாக்குதலுடன் முஸ்தபா படர் அல்டின், தலால் ஹமியே மற்றும் மொஹமட் அலி ஜமாடெட் ஆகியோரே தொடர்புபட்டிருப்பார்கள் என ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக சர்வதேச இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

141BH6mc_UCIAIhYMH.jpg largeimages (1)images

Geen opmerkingen:

Een reactie posten