அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம்
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 04:44.46 PM GMT ]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் இருக்கும் மீனவர்கள் 30 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இம்மாதம் 22 ஆம் திகதி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த இன்று நடைபெற்ற மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இலங்கையில் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை இலங்கையில் மன்னார் மாவட்ட நீதிமன்றம் இம்மாதம் 26 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. அவர்கள் 30 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் இம்மாதம் 22 ஆம் திகதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் தீவுப்பகுதியான தங்கச்சி மடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்கான 13 மீனவர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் தமிழ்நாடுஇபாண்டிச்சேரி மீனவ சங்க கூட்டமைப்பின் தலைவர் என்.ஜே.போஸ் தலைமையில் ராமேசுவரம் மீன்பிடி அனுமதி வழங்கும் அலுவலகத்தில் நடைபெற்றது.மீனவர் சங்க நிர்வாகிகள் அருளானந்தம்இ ஜேசுராஜாஇ எமரிட்இ ஞானசீலன்இ தேவதாஸ்இ எமரிட் ஆகியோர் உள்பட பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இம்மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 30 மீனவர்களையும் விடுதலை செய்யவும்இஅவ்வாறு விடுதலை செய்யாவிடில் மீனவ மக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
http://news.lankasri.com/show-RUmryESdNajo5.html
வடக்கு கடற்படை உயரதிகாரிக்கு எதிராக முறைப்பாடு
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 02:22.50 AM GMT ]
மதகுருமார், அரசாங்க உத்தியோகத்தர்கள், தீவக மக்களுக்கு இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாக குறித்த அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த கடற்படை அதிகாரியின் நடவடிக்கைகள் தொடர்பில் நாகதீப விஹாரையின் நவதகல பதுமதிஸ்ஸ தேரர், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த கடற்படை அதிகாரியின் நடவடிக்கையினால் எதிர்காலத் தேர்தல்களின் போது தீவக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கடற்படை உயரதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கடற்படைத் தளபதிக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் ஊடகவியலாளர் ஒருவர் மீது தக்குதல் முயற்சி
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 04:37.29 AM GMT ]
மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் ஜோசப் பெனான்டோ மீது நேற்று இரவு மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் வைத்து இனம் தெரியாத நபர்கள் தாக்க முற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மன்னார் நகரில் இருந்து பேசாலையில் உள்ள தனது வீட்டை நோக்கி இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த போது, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி தோட்டவெளி சந்தியில் மறைந்து நின்ற மர்மநபர்கள் பச்சை நிற முச்சக்கர வண்டியில் பின் தொடர்ந்து தாக்க முற்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பின் தொடர்ந்து சென்று முச்சக்கர வண்டியில் இருந்தவாறே உடகவியலாளரை தாக்க பல தடவைகள் முயற்சி செய்துள்ளதோடு மோட்டார் சைக்கிளை நிறுத்தவும் முயற்சி செய்துள்ளனர்.
எனினும் துரிதகதியில் செயற்பட்ட ஊடகவியலாளர் புதுக்குடியிருப்பு கிராமப்பகுதிக்கு சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரம் தாக்க முயற்சிகளை மேற்கொண்ட போதும் குறித்த சம்பவம் முறியடிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த சந்தியில் நின்ற சிலர் ஊடகவியலாளரை பத்திரமாக மீட்டு இரவு 9.30 மணியளவில் பேசாலை பகுதிக்கு பத்திரமாக அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய உள்ளதாக ஊடகவியலாளர் ஜோசப் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten