[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 02:54.35 PM GMT ]
இவ்விடயம் தொடர்பாக வெளிவருவதாவது:
மேற்படி கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் உட்பட அக்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் பிரதான நபர்ளுக்கு இலங்கை இராணுவத்தின் சம்பளம் இதுவரைக்கும் வழங்க்பட்டு வருகின்றது.
இதுபோல் பிரதீப் மாஸ்டருக்கும் அச்சம்பளம் வங்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு வழங்கபடும் சம்பளங்களை கட்சியிலுள்ள குறிப்பிட்ட சில நபர்களுக்கு வழங்குவதில்லை என அக்கட்சித்தலைமை முடிவெடுத்துள்ளது.
அவ்வாறு சம்பளம் வழங்காது ஒதுக்கப்பட்டுள்ளவர்களில் பிரதீப் மாஸ்டரும் அடங்குகின்றார்.
இவ்வியம் தொடர்பில் கட்சித்தலைவர் சி.சந்திரகாந்தனிடம் பிரதீப் மாஸ்டர் பேச்சுவார்த்தை நடாத்திய போது அது பிரதிப் மாஸ்டருக்கு திருப்தியளிக்காத பட்சித்திலேயேதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாய்ந்துள்ளதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நாம் சொல்ல நினைத்த விடயம் படைத்துறை நடவடிக்கை சார்ந்தது அல்ல. தமிழர்களின் இராஜதந்திர நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 03:05.01 PM GMT ]
எல்லா கதவுகளையும் மூடிவிட்டு நாம் தட்டிக் கொண்டிருப்பது சிறந்த இராஜதந்திரம் அல்ல. ஆனையிறவு படைத்தளத்தை புலிகள் மீட்க வடிவமைத்த தந்திரம் போன்று நாம் ஐநா - குறிப்பாக மேற்குலகம் எமது நலன்களோடு ஒத்துப்போகும் ஒரு நலனை மையப்படுத்தி எம்மை நெருங்குவதற்கான ஒரு பாதையை திறந்து விட வேண்டும்.
1991ம் ஆண்டு ஆனையிறவு படைத்தளத்தை தாக்கியழித்து கைப்பற்றும் நோக்குடன் ஒரு பாரிய படை நடவடிக்கையை புலிகள் நடத்தினார்கள். தொண்டையில் சிக்கிய முள் போல இராணுவ கேந்திர முக்கியத்துவத்தில் மட்டுமல்ல நிலவியல் தோற்றத்திலும் இருந்தது அப் படைத்தளம்.
ஒரு சில நாட்களிலிலேயே புலிகள் முன்னணி காவலரண்களை உடைத்து உட்புகுந்து சிறிய முகாம்களை கைப்பற்றி விநியோக பாதைகளை துண்டித்து ஒரு பெரிய முகாமுக்குள் படைகளை முடக்கினார்கள்.
அந்த நடவடிக்கையில் புலிகள் செய்த முக்கிய தவறு அதுதான்.
தப்பியோட வழியில்லாத சிங்கள இராணுவம் போராட வேண்டிய இக்கட்டுக்குள் தள்ளப்பட்டது. அத்தோடு படையினரை உயிரோடு மீட்க ஆனையிறவுக்கு அண்மையாக வேறொரு களத்தை திறக்க வேண்டிய இக்கட்டில் கொழும்பு தலைமையும் தள்ளப்பட்டது.
விளைவாக கட்டைக்காட்டில் தரையிறங்கிய இராணுவத்தினர் ஆனையிறவுக்கு நகர்ந்து ஒரு இணைப்பை ஏற்படுத்தியதால் அப்போது ஆனையிறவு படைத்தள மீட்பு புலிகளுக்கு தோல்வியில் முடிந்தது.
தோல்வி என்பதை ஒரு பாடமாகவே கருதும் புலிகள் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து 2001 ல் ஆனையிறவை மிட்க முடிவெடுத்த போது "ஓயாத அலைகள்" நடவடிக்கை மூலம் குடாரப்பில் தரையிறங்கி இத்தாவிலில் நிலையெடுத்திருந்த பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான அணிகள் ஆனையிறவு படைத்தளத்தின் இருப்பை எந்தவித தாக்குதலும் தொடுக்காமலே கேள்விக்குட்படுத்தினார்கள்.
சமகாலத்தில் பிரிகேடியர் தீபனின் விசேட அணிகள் புதுக்காட்டு சந்தியை ஊடறுத்து கிளாலி நோக்கி நிலையெடுத்திருந்தார்கள்.
இப்போது ஆனையிறவில் இருந்த படையினர் ஓட முடிவெடுத்தார்கள். அவர்கள் ஓட வசதியாக எழுதுமட்டுவாள் திறந்து விடப்பட்டிருந்தது. ஏனென்றால் 1991ல் கற்ற பாடம் இது.
ஆனையிறவு தளத்தை கைப்பற்றிய பின் தப்பியோடும் இராணுவத்தினரை சாவகச்சேரியில் வைத்து ஊடறுப்பதாக முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மேற்குலக மற்றும் இந்திய சதியும் ஆளணி பற்றாக்குறையும் ஆனையிறவு மீட்புடன் ஓயாத அலைகள் நடவடிக்கையை முற்றுக்கு கொண்டு வந்திருந்தன.
40,000 சிங்கள இராணுவத்தினர் உயிர் பிழைத்தனர்.
அதே போல் தோல்வி என்பதை ஒரு பாடமாகவே கருதும் புலிகள் மீண்டும் 2009ல் நடந்த தவறுகளை எப்படி களைவது கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து சாத்தியமான களமுனையை எப்படி திறப்பது திறந்த களமுனையில் ஊடறுத்து எப்படி நிலையெடுப்பது என்பதை தினமும் இரவு பகலாக ஒரு பாடமாகவே படித்துக் கொண்டிருக்கிறது அடுத்த தலைமுறை.
வரலாறு மீண்டும் எழுதப்படும்.
இது நிற்க.
தற்போது நாம் சொல்ல நினைத்த விடயம் படைத்துறை நடவடிக்கை சார்ந்தது அல்ல. தமிழர்களின் இராஜதந்திர நடவடிக்கை தொடர்பானது. அதற்கும் மேற்படி படை நடவடிக்கைகளிலிருந்தும் எமக்கான ஒரு பாடம் இருக்கிறது.
எம்மை அழித்ததில் ஐநா, அமெரிக்கா உட்பட மேற்குலகத்திற்கும் பங்கிருந்தது தற்போது குழந்தைகளுக்குக் கூட தெரியும். ஆனால் வேறு வழியில்லை. எமக்கான அங்கீகாரத்தை தேடி நாம் போய் சேர வேண்டிய இறுதி இடம் அதுதான்.
பான் கீ மூனின் கொடும்பாவி முதல் அண்மைய ஜெனிவா தீர்மானம் வரை நாம் எரித்து சாம்பலாக்கி விட்டோம். அது செய்ய வேண்டிய வேலைதான். ஆனால் மறுவளமாக அது ஐநாவிற்கும் மேற்குலகத்திற்கும் தமிழர்களுக்குமிடையிலான நிரந்தர பிரிவாக மாறாமல் பார்த்து கொள்ள வேண்டியதும் மிக முக்கியம்.
எல்லா கதவுகளையும் மூடிவிட்டு நாம் தட்டிக் கொண்டிருப்பது சிறந்த இராஜதந்திரம் அல்ல. ஆனையிறவு படைத்தளத்தை புலிகள் மீட்க வடிவமைத்த தந்திரம் போன்று நாம் ஐநா - குறிப்பாக மேற்குலகம் எமது நலன்களோடு ஒத்துப்போகும் ஒரு நலனை மையப்படுத்தி எம்மை நெருங்குவதற்கான ஒரு பாதையை திறந்து விட வேண்டும்.
எமது இறுதி விடுதலை குறித்த தீர்க்கமான புரிதல்களுடன், நாம் அவர்களை பயன்படுத்தும் தந்திரம் இதில் மேலோங்க வேண்டுமேயொழிய அவர்கள் எம்மை பயன்படுத்தி தமது நலன்களை பேணும் தந்திரமாக அது இருக்க கூடாது.
அண்மையில் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் ஒரு முக்கிய அம்சம் வெளிப்பட்டது. அதாவது இந்திய மத்திய அரசு, அமெரிக்கா, ஐநா உட்பட பலரையும் விமர்சித்த மாணவர்கள் கருணாநிதியையோ குறிப்பாக தமிழக முதல்வரையோ எந்த கட்டத்திலும் விமர்சிக்கவில்லை.
அதாவது தமது போராட்டத்தை அர்தப்படுத்தும் அதிகாரம் தமிழக சட்டசபைக்கு இருப்பதை உணர்ந்து ஒரு ஒத்தோடும் தந்திரத்தை கடைப்பிடித்தார்கள். அது சட்டசபை தீர்மானம் மூலம் போதிய பலனை தந்தது நம் எல்லோருக்கும் தெரிந்த கதை.
இணக்க, அடிபணிவு, சரணாகதி அரசியலை தவிர்த்து நாம் எமது போராட்டங்கள் மூலம் களம், புலம், தமிழகம் என்று ஒருமித்த சக்திகளாக திரண்டெழுந்து பேரம் பேசும் வல்லமையை வளர்க்கும் அதே கணம் எமது இறுதி இலக்கை அடைய - விடுதலை குறித்த போதிய புரிதல்களுடன் இராஜதந்திர நோக்கில் ஐநா மற்றும் மேற்குலகம் எமது போராட்ட நலன்களுடன் இணையும் ஒரு புள்ளியில் ஒரு பாதையை திறந்து விடுவோம்.
நாம் எல்லா பாதையையும் மூடிவிட்டு எம்மை விடுவிக்குமாறு கேட்பது அவர்கள் இன அழிப்பு அரசுடன் ஒத்தோடவும் அல்லது எமக்கு எதிரான வேறு ஒரு பாதையை தெரிவு செய்யவுமே வழிவகுக்கும்.
புலிகளின் ஆனையிறவு படைத்தள மீட்பு சொல்லும் எளிய பாடம் இது.
p_krishnarajanifeminist @yahoo.com
Geen opmerkingen:
Een reactie posten