தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 april 2013

தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெல்லியடி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளுக்கு விஜயம்


இலங்கையில் இனப்படுகொலையைக் கண்டித்து தமிழ் அமைப்புக்கள் டெல்லியில் போராட்டம்
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 08:45.33 AM GMT ]
 இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலையைக் கண்டித்தும், அது குறித்து சர்வதேச  சுயேச்சையான விசாரணைக் குழுவை ஐக்கிய நாடுகள் சபை  அமைக்க வேண்டும் என்று
 வலியுறுத்தியும் அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  புதுடில்லியில் போராட்டம் நடத்தப்படவுள்ளன.
எதிர்வரும் மே 12ம் திகதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் தெரிவித்துள்ளார்.
அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தை அடுத்து முகுந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரங்கள் நிலைநிறுத்தப்பட்டு சம உரிமையுடன் வாழ வகை செய்யப்பட வேண்டும் ஐ.நா. மனித
உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க தீர்மானத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை.
அண்மையில் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானமும் நீர்த்துப் போனதால் ஈழத் தமிழர்களுக்கு எந்த விடியலும் இல்லை.
தமிழீழம் குறித்து இலங்கையில் வாழும் தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இலங்கை குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஐ.நா. மன்றத்துக்கு அழுத்தம் தர
வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெல்லியடி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளுக்கு விஜயம்
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 09:44.04 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றையதினம் நெல்லியடி மற்றும் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் சில கிராமங்களுக்கு விஜயம் செய்து பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன்,எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடியவர்கள் ஆவர்.
பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவரமாகக் கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும் தெளிவுபடுத்தினார்கள்.
நெல்லியடி மற்றும் வடமராட்சி கிழக்கில் அம்பன், நாகர்கோவில், குடத்தனை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களையே இவர்கள் சந்தித்து உரையாடினார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten