தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 februari 2013

eady to face threats at UNHRC session: Lankan government


ஜெனிவாவில் எமக்கெதிராக முன்வைக்கப்படும் சவால்களை எதிர்கொள்ளத் தயார்! இலங்கை அரசாங்கம்
ஜெனிவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற அனைத்து சவால்களையும் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா கூட்டத் தொடருக்காக இலங்கை சார்பாக செல்லவுள்ள குழு தொடர்பில் அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை.
எனினும் அக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற அனைத்து சவால்களையும் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவுள்ளோம்.
குறிப்பாக சனல்-4 வினால் இலங்கைக்கு எதிராக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஒளிநாடா குறித்தும் முகங்கொடுக்க தயாராகவேயுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


eady to face threats at UNHRC session: Lankan government
[ Thursday, 21 February 2013, 04:16.47 PM GMT +05:30 ]
Lankan government announced that they are ready to face all the threats to be cause at the UN Human Rights Commission in Geneva.
Addressing weekly media briefing in Colombo Cabinet media spokesman Keheliya Rambukwella went on to say,
Government yet to make decision on Lankan delegates to take part in the United Nation Human Rights Commission.
However we are ready to face the entire threats legal manner at the UNHRC session.
Minister further noted ready to face Channel-4 video footage released against the country recently.

http://eng.lankasri.com/view.php?224Old0acJ5YOd4e3KMM302cAmB3ddeZBmS202eWAA2e4yY5naca3lOA42

Geen opmerkingen:

Een reactie posten