தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 februari 2013

இரா.சம்பந்தரிடம் கிடுக்கிப் பிடி போட்ட அதிர்வு இணையம் !


உலகத் தமிழர் பேரவையின் (GTF) வின் மூன்றாவது மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் லண்டன் வந்துள்ளார். நேற்றைய தினம் இம் மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது இரா.சம்பந்தனிடம் அதிர்வு இணைய நிருபர் கேள்விகளை தொடுத்திருந்தார். நேற்றைய தினம் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட வேற்றின எம்.பீக்கள் எல்லாருமே, சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று சொல்கிறார்களே, நீங்கள் இதனை இலங்கை நாடாளுமன்றில் தெரிவிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினோம். அது தான் ! அது தான் ! நாங்கள் ஏற்கனவே இது குறித்து பேசிவிட்டோமே என்று பதிலளித்துள்ளார் இரா.சம்பந்தன் அவர்கள். இதனைத் தொடர்ந்து, ஐ.நா வின் மனித உரிமை மாநாடு ஜெனீவாவில் நடைபெறுகிறதே ஏன் செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பினோம் !

அதற்கும் சரியான பதிலை அவர் கூறவில்லை. அழைப்பிதழ் வரவில்லை என்று கூறிய அவர், 2ம் திகதி ஜெனிவா செலவதை மட்டும் கூறியுள்ளார். ஆனால் முக்கியமான அமர்வுகள் 13ம் திகதியே ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். காணொளி இணைப்பு.


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4620

Geen opmerkingen:

Een reactie posten