தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 februari 2013

இறுதிக்கட்ட யுத்தத்தில் கைவிடப்பட்ட நகைகளை இரகசியமாக தேடியலையும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்!


2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளாலும், மக்களாலும் கைவிடப்பட்ட பெறுமதியான பவுண் நகைகள், மற்றும் எரிபொருள் ஆகியவற்றை கொள்ளையிடுவதற்கு சிங்கள இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்குமிடையில் கடுமையான முரண்பாடு நிலவி வருகின்றது.
யுத்தத்தின்பேது முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட மாவட்டத்தின் மிக முக்கியமான பிரதேசங்களில் விடுதலைப் புலிகளாலும், பொதுமக்களாலும் கைவிடப்பட்ட பெறுமதியான பொருட்கள் இன்னமும் மக்களால் மீட்கப்படவில்லை.
அதைவிட பல பெறுமதியான பொருட்கள் எங்கிருக்கின்றன என்றே தெரியாத நிலையில் இரத்தமும், சதையும் சிந்தப்பட்ட போர்க்களம் சிங்கள படைச்சிப்பாய்களுக்கும் பொலிஸாருக்கும் இப்போது புதையலாக தெரிகின்றது.
அண்மையில் முள்ளிவாய்க்காலில் தென்னிலங்கையிலிருந்து வந்த இராணுவ பிரிவொன்று குழி தோண்டி புதையல் தேடிக்கொண்டிருந்தபோது அப்பகுதி படையினர் விசாரித்தபோது அவர்கள் அந்த மாவட்டத்தில் பணியில்லாதவர்கள்.
மேலும் விசாரித்தபோது அவர்கள் புதையல் தேடி வந்தது பிடிபட்டது. இதன் பின்னர் படையினராலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறான சம்பவமொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொக்கிளாய் பகுதியிலும் இடம்பெற்றுள்ளது.
தெற்கிலிருந்து வந்த பொலிஸ் படையொன்று வெடிபொருட்களை அகற்றப் போவதாக வீதிகளை மறித்து விட்டு, கொக்கிளாய் பிள்ளையார் ஆலயத்திற்குப் பின்னால் முகம் மறைக்கப்பட்ட இளைஞர் ஒருவரை வாகனத்தில் அழைத்து வந்து புதையல் தேடியுள்ளனர்.
மிக இரகசியமாக இடம்பெற்ற இந்த நடவடிக்கை எப்படியோ அப்பகுதி கடற்படையினருக்கு தெரியவந்து விட்டது. இதனையடுத்து சிங்கள பொலிஸ் படையை, சிங்கள கடற்படை சுற்றிவளைத்து ஆயுதமுனையில் பிடித்துள்ளனர்.
இதன் பின்னர் கடும் அச்சுறுத்தலுடன் பொலிஸ் படையை துரத்தியடித்த கடற்படை, தற்போது ஆலயச் சுற்றாடலில் பெருமளவு கடற்படையினரை குவித்து வைத்து பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
ஆனால் மக்களுக்கு அந்தப் பகுதியில் பாரிய வெடிபொருள் இருப்பதாகவும், அதை மீட்கவேண்டியிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryCRbNYnr4.html#sthash.v3KsMYbQ.dpuf

Geen opmerkingen:

Een reactie posten