மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் மாணவிகள் மூவர் இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5.30 மணியளவில் மாத்தறை திக்வல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாலைநேர வகுப்புக்கு தனியாக சென்றுள்ளனர்.
வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தின் அருகில் வைத்து தடிகளுடன் வந்த பேரினவாத இளைஞர்கள் சிலர் இவர்களைத் தாக்கியுள்ளனர்.
இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது என்றும் பொலிஸில் முறைப்பாடு செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
குறித்த மாணவிகள் இச்சம்பவத்தினை தமது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தமது பெற்றோருடன் வந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று, விசாரணை செய்த போது அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYnw3.html#sthash.B0DuOVXs.dpufவகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தின் அருகில் வைத்து தடிகளுடன் வந்த பேரினவாத இளைஞர்கள் சிலர் இவர்களைத் தாக்கியுள்ளனர்.
இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது என்றும் பொலிஸில் முறைப்பாடு செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
குறித்த மாணவிகள் இச்சம்பவத்தினை தமது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தமது பெற்றோருடன் வந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று, விசாரணை செய்த போது அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten