இலங்கைப் படையினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையானது ஊகத்தின் பேரில் வெளியிடப்பட்டதேயன்றி உண்மைகளுக்கு அப்பாற்பட்டது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கைப் படையினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள காணொளி தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் கூடிய படைப்பு வரும் வரை எவ்வித முறைப்பாடுகளும் தெரிவித்திருக்கவில்லை. அவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் விசாரணை நடத்தி அதற்குரியவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர பொலிஸாரிடம் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட செயல்முறைகள் உள்ளன.
இராணுவ வீரர்கள் மீது மனித உரிமை மீறல்கள், பாலியல் வல்லுறவுகள் தொடர்பில் கடந்த காலங்களிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளாக இணங்காணப்பட்டவர்கள் சட்டத்தில் செயன்முறையின் ஊடாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.
முரண்பாடு இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்குதியில் (ஜனவரி 2007- மே 2009), வடக்கில், 7 பாதுகாப்புப் படைவீரர்கள் 5 பாலியல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ஐவரில் 4 பேர் சிங்களவர் என்பதுடன் ஒருவர் தமிழராவார்.
இவ் எண்ணிக்கை வட மாகாணத்தில் மொத்தமாக பதிவாகிய 119 சம்பவங்கள் தொடர்பில் (சிவிலியன்களுக்கு எதிரான முறைப்பாடுகள் அடங்கலாக) குற்றஞ்சாட்டப்பட்ட 125 பேரில் அடங்குகின்றது.
வடக்கில் முரண்பாட்டுக்கு பின்னரான காலப்பகுதியில் 10 பாதுகாப்புப் படையினர் மீது 6 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டதுடன் இவ் எண்ணிக்கை வட மாகாணத்தில் மொத்தமாக பதிவாகிய 307 சம்பவங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 256 பேரில் அடங்குகின்றது.
பாதுகாப்புப்படையினர் சம்பந்தப்பட்ட மேற்குறிப்பிட்ட அனைத்து வழக்கு தொடர்பிலும் அரசாங்கத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அறிக்கைகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு பெறும் இலக்குடனேயே முன்வைக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் ஆதரவு குழுக்களின் பிரசாரங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்குக் கொண்டவை. இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் இந்நிலைதான் உள்ளது.
சர்வதேச சமூகமானது இக்குழுக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் தந்திரோபாரய நடவடிக்கைகளை கருத்தில் கொள்வதுடன் அதிகமான சர்வதேச அமைப்புகள் தாம் ஏமாற்றப்படுவதை உணரவில்லை.
சனல் 4 வின் தற்போதைய காணொளி மற்றும் படங்களின் காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். பிராபகரனின் மகனின் படமானது பல காலங்களுக்கு முன்னர் திறந்த தளத்தில் வெளியாகியதுடன் ஆர்வமுள்ள எத் தரப்பினருக்கும் கிடைக்ககூடியதாக இருந்தது.
யாருக்கேனும் தேவையிருந்தால் அவற்றை ஒரே நேரத்தில் வெளியிட்டிருக்கலாம். அது தொடர்பில் பொருத்தமான தகவல்களை வைத்திருந்த அதிகாரிகளுக்கு விசாரணையின் பொருட்டு வழங்கியிருக்கலாம். ஒவ்வொரு மனித உரிமைகள் கூட்டத்தொடர் வரை இவ்விவகாரம் வேகத்துடன் செல்வதை உறுதிசெய்வதே இதன் நோக்கமென்பதை இது சுட்டிக்காட்டுகின்றது.
மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு முன்னதாக நடைபெறும் நிகழ்வுகள் இது சம்பந்தமான புத்தக வெளியீடுகள், மாநாடுகள், ஊடக பிரசாரங்கள், சமூக ஊடகம் மூலமான பிரசாரங்கள், பெருந்தொகையான மின்னஞ்சல்கள், அறிக்கைகள் வெளியிடுதல், கடைசி நேரத்தில் அனுதாப அலைகளை ஏற்படுத்தும் வீடியோக்கள், படங்கள் வெளியிடுதல் போன்றவற்றை மையப்படுத்தியுள்ளன.
இது தொடர்பில் கடந்த காலத்திலும் பல உதாரணங்கள் உள்ளன. இதேபோன்ற விடயங்களை 2014 ம் ஆண்டிலும் காணப்பட்டால் ஆச்சரியப்படாதீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.net/show-RUmryCRbNYnry.htmlமனித உரிமைகள் கண்காணிப்பகம் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் கூடிய படைப்பு வரும் வரை எவ்வித முறைப்பாடுகளும் தெரிவித்திருக்கவில்லை. அவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் விசாரணை நடத்தி அதற்குரியவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர பொலிஸாரிடம் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட செயல்முறைகள் உள்ளன.
இராணுவ வீரர்கள் மீது மனித உரிமை மீறல்கள், பாலியல் வல்லுறவுகள் தொடர்பில் கடந்த காலங்களிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளாக இணங்காணப்பட்டவர்கள் சட்டத்தில் செயன்முறையின் ஊடாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.
முரண்பாடு இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்குதியில் (ஜனவரி 2007- மே 2009), வடக்கில், 7 பாதுகாப்புப் படைவீரர்கள் 5 பாலியல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ஐவரில் 4 பேர் சிங்களவர் என்பதுடன் ஒருவர் தமிழராவார்.
இவ் எண்ணிக்கை வட மாகாணத்தில் மொத்தமாக பதிவாகிய 119 சம்பவங்கள் தொடர்பில் (சிவிலியன்களுக்கு எதிரான முறைப்பாடுகள் அடங்கலாக) குற்றஞ்சாட்டப்பட்ட 125 பேரில் அடங்குகின்றது.
வடக்கில் முரண்பாட்டுக்கு பின்னரான காலப்பகுதியில் 10 பாதுகாப்புப் படையினர் மீது 6 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டதுடன் இவ் எண்ணிக்கை வட மாகாணத்தில் மொத்தமாக பதிவாகிய 307 சம்பவங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 256 பேரில் அடங்குகின்றது.
பாதுகாப்புப்படையினர் சம்பந்தப்பட்ட மேற்குறிப்பிட்ட அனைத்து வழக்கு தொடர்பிலும் அரசாங்கத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அறிக்கைகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு பெறும் இலக்குடனேயே முன்வைக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் ஆதரவு குழுக்களின் பிரசாரங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்குக் கொண்டவை. இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் இந்நிலைதான் உள்ளது.
சர்வதேச சமூகமானது இக்குழுக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் தந்திரோபாரய நடவடிக்கைகளை கருத்தில் கொள்வதுடன் அதிகமான சர்வதேச அமைப்புகள் தாம் ஏமாற்றப்படுவதை உணரவில்லை.
சனல் 4 வின் தற்போதைய காணொளி மற்றும் படங்களின் காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். பிராபகரனின் மகனின் படமானது பல காலங்களுக்கு முன்னர் திறந்த தளத்தில் வெளியாகியதுடன் ஆர்வமுள்ள எத் தரப்பினருக்கும் கிடைக்ககூடியதாக இருந்தது.
யாருக்கேனும் தேவையிருந்தால் அவற்றை ஒரே நேரத்தில் வெளியிட்டிருக்கலாம். அது தொடர்பில் பொருத்தமான தகவல்களை வைத்திருந்த அதிகாரிகளுக்கு விசாரணையின் பொருட்டு வழங்கியிருக்கலாம். ஒவ்வொரு மனித உரிமைகள் கூட்டத்தொடர் வரை இவ்விவகாரம் வேகத்துடன் செல்வதை உறுதிசெய்வதே இதன் நோக்கமென்பதை இது சுட்டிக்காட்டுகின்றது.
மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு முன்னதாக நடைபெறும் நிகழ்வுகள் இது சம்பந்தமான புத்தக வெளியீடுகள், மாநாடுகள், ஊடக பிரசாரங்கள், சமூக ஊடகம் மூலமான பிரசாரங்கள், பெருந்தொகையான மின்னஞ்சல்கள், அறிக்கைகள் வெளியிடுதல், கடைசி நேரத்தில் அனுதாப அலைகளை ஏற்படுத்தும் வீடியோக்கள், படங்கள் வெளியிடுதல் போன்றவற்றை மையப்படுத்தியுள்ளன.
இது தொடர்பில் கடந்த காலத்திலும் பல உதாரணங்கள் உள்ளன. இதேபோன்ற விடயங்களை 2014 ம் ஆண்டிலும் காணப்பட்டால் ஆச்சரியப்படாதீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten