போர்க்குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இலங்கை உரிய ஆர்வம் காட்டவில்லை என அமெரிக்கா கருதியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவில்லை என அப்போதைய அமெரிக்கத் தூதுவர் பெற்றிசீயா புட்டினஸ் தெரிவித்துள்ளார்.
ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் படையினருக்கு எதிராக தாமே விசாரணை செய்யும் நடவடிக்கையானது சிக்கல்களை ஏற்படுத்தும்.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நியமித்துள்ளார்.
எனினும் இந்த ஆணைக்குழுவின் பணிகள் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமென முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது, 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் மேலதிக தவணைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் வலியுறுத்துவதன் மூலம் இரு நாடகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகளவு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பல்லைக்கழக ஆசிரியர் ஒன்றியமும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் சுட்டிக்காட்டியுள்ளன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த இரகசிய குறிப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
படையதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு எதிரான போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள காரணத்தினால் நிலைமைகள் மிகவும் சிக்கல் மிக்கவையாக மாறியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten