நான் தான் முன்னின்று அந்த மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தேன்.அது மிகவும் கொடுமையானது ஏனென்றால் அது அரசியல் சட்ட முறைமைக்கும் இயல்புக்கும் எதிரான நீதி வழுவிய ஒரு தீர்ப்பு என்று இப்போது தான் உணர்கிறேன் என்கிறார்.
இத்தகைய வழக்கில் தீர்ப்பெழுதும் முன் அந்த மனிதர்களின் முன்னாள் வரலாறு அவர்களின் நிறுவப்பட்ட பண்புகள் ஆனியவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என சட்ட விதி 21 உபதேசிக்கிறது.
அம்முறைமையை நாங்கள் கணக்கில் எடுக்காது நான் உட்பட மூன்று நீதிபதிகளும் தவறிழைத்துவிட்டோம் எனவும் இதே கருத்தை முன்னாள் நீதிபதி எஸ்.பி. ஸின்ஹா அவர்களும் வெளிப்படுத்தி யிருப்பதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
மேலும் சாதாரண ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு சிறைத்துறை வழங்கும் சில சலுகைகள் கூட 23 ஆண்டுகள் அதாவது இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து விட்ட இந்த ஏழைகள் மூவருக்கும் வழங்கப்படவில்லை எனவும் அவர் வேதனைப்பட்டிருக்கிறார்.
மேலும் இதற்கப்புறமும் தூக்கு என்று ஆட்சியாளர்கள் முழங்கினால் அது ஒரே குற்றத்துக்கான இரண்டு தண்டனையாகவும் மேலும் நீதித்துறைகள் கண்டிராத மிக மோசமான நிகழ்வாகவும் அமையும் அதனால் அம் மூவரையும் வாழவிடவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.
Geen opmerkingen:
Een reactie posten