தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 februari 2013

வீசா இல்லாமலேயே விசாரணைக்காக இலங்கை வர ஐக்கிய நாடுகள் தயாராகிறது!– சரத் பொன்சேகா எச்சரிக்கை!


வீசா இல்லாமலேயே இலங்கைக்கு வந்து விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை விரைவில் சில ஒழுங்குகளை அறிமுகப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
இதன்மூலம் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் இலங்கையின் போர் இடம்பெற்ற இடங்களுக்கு சென்று தமது விசாரணைகளை நடத்தமுடியும் நிலை ஏற்படும்.
ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே போர் இடம்பெற்றமை தொடர்பில் சர்வதேச அமைப்பு ஒன்று குறித்து கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இந்தநிலையில் இலங்கைக்கு சென்று விசாரணையை நடத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை, குழு ஒன்றை அமைக்க தயாராகி வருவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இறுதிப் போர் காலத்தில் இருந்த தளபதி என்ற வகையில் தாம் விசாரணைகளுக்கு முகங்கொடுக்கத் தயார் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYnty.html#sthash.2oydflkj.dpuf

Geen opmerkingen:

Een reactie posten