தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 februari 2013

வட, கிழக்கில் இராணுவ ஆட்சியை நீக்கக் கோரி மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ ஆட்சியை நீக்கக் கோரி சமஉரிமை இயக்கத்தினால் மட்டக்களப்பு நகரில் இன்று கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வு, மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இடபெற்றது. இதில் தமிழ், முஸ்லிம் மக்கள் பலரும் கையெழுத்திட்டனர்.
வடக்கு, கிழக்கில் இராணுவ ஆட்சியை நீக்க வேண்டும். கைதுகள், கடத்தல்கள் உடன் நிறுத்தப்படல் வேண்டும். அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வுரிமையை பறிக்கக் கூடாது போன்ற கோரிக்கைகள் எழுதப்பட்ட நீளமான பதாகையில் இந்த கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கை கொழும்பு மற்றும் காலி, கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் பொதுமக்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருவதாகவும் சமஉரிமை இயக்கத்தின் இணை ஏற்பாட்டாளர் றிச்சட் தெரிவித்தார்.

http://www.jvpnews.com/srilanka/15731.html

Geen opmerkingen:

Een reactie posten