தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 februari 2013

2012ல் என்னை கற்பழித்தார்கள்: பெண்ணின் வாக்குமூலம் !


மனித உரிமைக் கண்காணிப்பகம் 141 பக்க அறிக்கை ஒன்றை இன்றைய தினம்(26) வெளியிட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. 2006ம் ஆண்டு காலப் பகுதி முதல் 2012ம் ஆண்டு காலப்பகுதிவரைக்கும் உட்பட்ட பகுதியில், தமக்கு கிடைக்கப்பெற்ற 75 முறைப்பாடுகளை அவர்கள் பதிவுசெய்துள்ளார்கள். இக் காலப் பகுதிக்குள் பல ஆயிரக்கணக்கான கற்பழிப்புகள் இடம்பெற்றிருந்த போதிலும் , தமக்கு முறைப்படி கிடைத்த புகார்கள் 75 தான் என கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கைதானா ஒரு இளம் தமிழ் பெண்ணை கொண்டுசென்ற இலங்கை இராணுவம் அவரைச் சித்திரவை செய்துள்ளார்கள். பொலித்தீன் பை ஒன்றை எடுத்து, அதனுள் பெற்றோலை விட்டு, அப் பொலித்தீன் பையை இப் பெண்ணின் தலையில் கட்டியுள்ளனர். இதனால் அவர் மூச்சை இழந்து மயங்கி விழுந்துள்ளார். 

சில மணி நேரம் கழித்து தான் மயக்கத்தில் இருந்து எழுந்தவேளை, தாம் ஒரு இருட்டறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக அப்பெண் கூறியுள்ளார். பின்னர் தன்னிடம் வந்த 2 சிங்கள அதிகாரிகள் தன்னை பாலியரீதியாக துன்புறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பின்னர் இரவு வந்த மேலும் 2 அதிகாரிகள் தன்னை கற்பழித்ததாகவும் அவர் கண்ணிர் மல்கத் தெரிவித்துள்ளார். இவரது கூற்று காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது. 
இலங்கை இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்களின் ஒருவர், நேர்காணல் ஒன்றையும் வழங்கியுள்ளார். ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இலங்கை அரசை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. 



http://athirvu.co.uk/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4610

Geen opmerkingen:

Een reactie posten