தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 februari 2013

அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது!- ரவி கருணாநாயக்க !


அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளுடன் உறவுகளைப் பேணும் போது சில நியதிகள் மற்றும் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
சரியான கொள்கைகளைப் பின்பற்றாது சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது.
சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.
சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீளக் கூடிய ஆற்றல் இலங்கை அரசாங்கத்திற்கு கிடையாது.
அரசாங்கம் தேர்தல்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருகின்றது. அடுத்த தேர்தலை வெற்றிகொண்டு ஆட்சியை நீடிப்பதே அரசாங்கத்தின் இலக்கா அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten