தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 februari 2013

இலங்கையில் ஏற்பட்ட மனித உயிரிழப்புக்களுக்கு சீனா, பாகிஸ்தான் ஆயுதங்களே காரணம்! சர்வதேச மன்னிப்பு சபை !


2000ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான இலங்கைத்தீவில் நடந்தேறிய யுத்தத்தில் ஏற்பட்ட மனித இழப்புக்களுக்கும் பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் பிரதான காரணியாக சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆயுத வழங்கல்களே பிரதான காரணமாக அமைந்திருந்ததென சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் ஆயுதங்களின் விற்பனையினை கட்டுப்படுத்துதல் மற்றும் இதன் வெளிப்படைத்தன்மை உறுதி செய்தல் தொடர்பிலான புதிய அறிக்கையொன்றிiலேயே இக்கருத்தினை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த யுத்தின் போது பாவிக்கப்பட்ட ஆயுதங்களில் பெருமளவானவை சீனா ஆயுத உற்பத்தி நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையே என்பதனை சர்வதேச மன்னிப்பு சபை அடையாளங்கண்டுள்ளதாவும் தெரிவித்துள்ளது.
சிறிய பெரிய கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள், பீரங்கிகள், குண்டுகள் என பல்வேறு வகைப்பட்ட ஆயுத தளபாடங்களை சீனா மற்றும் பாகிஸ்தானிய அரசுகளுக்கு சொந்தமான  நிறுவனங்கள் ஊடாகவே வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்பு சபை, இச்செயற்பாடுகள் பாரிய மனித அழிவுகளுக்கும் பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் ஊக்குவிப்பதாக அமைகின்றதென தெரிவித்துள்ளது.
சிங்கள அரச படைகளது தமிழர்கள் மீதான இனவழிப்புக்கு பாவிக்கப்பட்டதாக அடையாளங் காணப்பட்ட கிளஸ்ரர் குண்டுகள் என அழைக்கப்படுகின்ற கொத்துக்குண்டுகளின் பாவனைக்கு சர்வதேச அளவிலான தடைக்கும் சர்வதேச மன்னிப்பு சபை அழைப்பு விடுத்துள்ளது.
http://www.amnesty.fr/Presse/Communiques-de-presse/Le-grand-salon-de-l%E2%80%99armement-d%E2%80%99Abou-Dhabi-revele-les-faiblesses-des-pourparlers-relatifs-au-Traite-s-7905
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYnwz.html#sthash.6n4mRk1k.dpuf

Geen opmerkingen:

Een reactie posten