தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 februari 2013

இலங்கையில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கும் முடிவில் மாற்றமில்லை!- கனடியப் பிரதமர்




இலங்கையில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் இந்த ஆண்டு இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவில் இருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் அறிவித்துள்ளார்.
கனடிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலைமைகள் முன்னேற்றமடையாது போனால், அங்கு நடைபெறும் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தேன்.
அந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவலையளிக்கிறது.  அந்த நாடு மோசமான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவை கனடா கைவிட வேண்டும் என்று கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா கேட்டுக் கொண்டிருந்த போதும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.
இலங்கை விடயத்தில் மென்போக்குடன் நடந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புகளையும் கனடிய பிரதமர் நிராகரித்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryCRbNYno6.html#sthash.PCcDYrZG.dpuf

http://www.tamilwin.net/show-RUmryCRbNYno6.html

Geen opmerkingen:

Een reactie posten