ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலைமையில் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை இக் கூட்டத் தொடர் இடம்பெறும்.
அத்துடன் இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை மார்ச் மாதம் 20 ஆம் திகதி மனித உரிமைப்பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் இலங்கையின் சார்பில் ஐ.நா. மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் பிரதிநிதியுமான மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஜெனீவா நோக்கி பயணமாகியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவா செல்லவிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன். எஸ். ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten