நாட்டின் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் சில நாடுகள் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாணவர் கொலை மற்றும் மூதுர் எக்செய்ன் பாம் போர் ஹங்கர் நிறுவன பணியாளர் கொலை ஆகிய சம்பவங்கள் n;தாடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை.
இலங்கைக்கு விஜயம் செய்வதாக முன்னர் அறிவித்திருந்தார். பின்னர், தமது விஜயத்திற்கு முன்னதாக பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பி வைப்பதாக அறிவித்தார்.
இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்த அதிகாரிகள், நவநீதம்பிள்ளை அறிக்கை தயாரிப்பதற்கு தேவையான தகவல்களை வழங்கியுள்ளனர்.
வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை சீர்குலைக்கும் நோக்கில் சில சர்வதே சக்திகள் செயற்படுகின்றன.
2011ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 வீதமாகும். எனினும், யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் பொருளாதார வளர்ச்சி 27 வீதமாகும்.
அரசாங்கம் காணி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
காணி ஆணைக்குழுவின் உதவியுடன் யுத்த வலயத்தில் நிலவி வரும் காணி உரிமை தொடர்பான பிணக்குகளுக்கு தீர்வு காணப்படும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.net/show-RUmryCRbNYnr0.html
Geen opmerkingen:
Een reactie posten