தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 februari 2013

லண்டன் ரயில் நிலையங்களை ஆக்கிரமிக்கும் பாலச்சந்திரன் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்!


வியட்நாம் நாட்டிற்குச் சென்ற அமெரிக்கா, அங்கே புரிந்த அட்டூழியங்கள் பல. கொத்தணிக் குண்டுகளையும், வெளைப் பாஸ்பரஸ் குண்டுகளையும் மக்கள் குடியிருப்புக்கு மேல் போட்டார்கள். இன்று ஈழத் தமிழினம் அனுபவித்த கொடுமைகளைப்போல அன்று வியட்நாமியர்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவை ஆகும்.
ஒரு கிராமத்தை அமெரிக்க வான் படை எரி குண்டு வீசித் தாக்கியவேளை, எரிகாயங்களோடு, உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் உயிரைக் காப்பாற்ற மரண பயத்தோடு ஓடும் ஒரு சிறுமியின் புகைப்படம் அப்போது வெளியானது.
இது உலகில் உள்ள அனைவரது நெஞ்சையும் தொட்டது. ஏன் இந்தப் போர் ? என்று உலகத் தலைவர்கள் வெறுக்கும் வண்ணம் இப் புகைப்படம் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவே அமெரிகாவின் நிலைப்பாட்டையும் இறுதியில் மாற்றியது.
அன்று வியட்நாம் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட, அச் சிறுமியின் புகைப்படத்துக்கு நிகரான புகைப்படம் ஒன்று, இபோது தமிழர்கள் கைகளில் உள்ளது ! அது தான் 12 வயதுப் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படம் ஆகும். அவன் தேசிய தலைவரது புதல்வன், என்று எவரும் பேசவரவில்லை.
மாறாக ஒரு சிறுவனை, ஈவு இரக்கம் இன்றி, இவ்வாறு இராணுவத்தினர் கொன்றிருக்கிறார்களே என்பது தான் அனைவரது மனதையும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது.
இப் படுபாதகச் செயலை, நாம் உலகறியச் செய்யவேண்டும் ! இலங்கையில் முகத் திரையைக் கிழியச் செய்யவேண்டும்! இதற்காக நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்? என்ற கேள்வி மானமுள்ள ஒவ்வொரு தமிழன் மனதிலும் உள்ளது. பிஸ்கட்டை சாப்பிடக் கொடுத்துவிட்டு, பின்னர் கொலைசெய்துள்ல இலங்கை இராணுவத்தின் முகத்திரையை எவ்வாறு கிழிப்பது?
இன்று பிரித்தானியாவில் (லண்டன் மையப்பகுதியில்) பாலச்சந்திரன் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுர வினியோகம் ஆரம்பமாகியுள்ளது.
மதியம் 12.00 மணி தொடக்கம் ஈஸ்ட்காம், வக்ஸ்கோல், கனரிவோப், படிங்டன் என்று பல தொடரூந்து நிலையங்களில், தமிழர்கள் பாலச்சந்திரன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற துண்டுப் பிரசுரங்களை வழங்க இருக்கிறார்கள்.
இதனை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) முன் நின்று ஆரம்பித்துள்ளது. பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள், வேற்றின மக்களுக்கு பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வழங்கி, பின்னர் ஏனைய தொடரூந்து நிலையத்துக்குச் செல்லவுள்ளனர்.
இப்படியாக இன்று நாள் முழுவதும் நகர்ந்து, இறுதியில், ரவகல் சதுக்கத்தை அடைந்து, அங்கே நடமாடும் பொதுமக்களுக்கும் துண்டுப் பிரசுரத்தை வழங்கவுள்ளார்கள். இன்று கடுமையான குழிர் காலநிலை லண்டனில் நிலவுகிறது. இதனையும் பொருட்படுத்தாது, இளையோர்கள், மற்றும் TCC உறுப்பினர்கள் வீதிகளில் இறங்கியுள்ளார்கள்.
எனவே பிரித்தானியா வாழ் மக்களே ! நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். முடியவில்லை என்றால் கூட அவர்களை ஊக்கப்படுத்துங்கள். தேனீர் அல்லது சிற்றுண்டியைக் கொண்டு சென்று கொடுத்து அவர்களை உச்சாகப்படுத்துங்கள்.
பாலச்சந்திரன் கொலைக்கு இலங்கை அரசு பதில்சொல்லியே ஆகவேண்டும் ! இதற்காக மனச்சாட்சியுள்ள எந்தப் பொதுமக்கனையும், அரசியல் தலைவர்களையும் நாம் நாடத் தயார் என்பதனை உலகறியச் செய்வோம்!

http://news.lankasri.com/show-RUmryCRXNXfu7.html


லண்டன் ரயில் நிலையங்களை ஆக்கிரமிக்கும் பாலச்சந்திரன் விழிப்புணர்வு !
23 February, 2013 by admin


வியட்நாம் நாட்டிற்குச் சென்ற அமெரிக்கா, அங்கே புரிந்த அட்டூழியங்கள் பல. கொத்தணிக் குண்டுகளையும், வெளைப் பாஸ்பரஸ் குண்டுகளையும் மக்கள் குடியிருப்புக்கு மேல் போட்டார்கள். இன்று ஈழத் தமிழினம் அனுபவித்த கொடுமைகளைப்போல அன்று வியட்நாமியர்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவை ஆகும். ஒரு கிராமத்தை அமெரிக்க வான் படை எரி குண்டு வீசித் தாக்கியவேளை, எரிகாயங்களோடு, உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் உயிரைக் காப்பாற்ற மரண பயத்தோடு ஓடும் ஒரு சிறுமியின் புகைப்படம் அப்போது வெளியானது. இது உலகில் உள்ள அனைவரது நெஞ்சையும் தொட்டது. ஏன் இந்தப் போர் ? என்று உலகத் தலைவர்கள் வெறுக்கும் வண்ணம் இப் புகைப்படம் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவே அமெரிகாவின் நிலைப்பாட்டையும் இறுதியில் மாற்றியது. 

அன்று வியட்நாம் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட, அச் சிறுமியின் புகைப்படத்துக்கு நிகரான புகைப்படம் ஒன்று, இபோது தமிழர்கள் கைகளில் உள்ளது ! அது தான் 12 வயதுப் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படம் ஆகும். அவன் தேசிய தலைவரது புதல்வன், என்று எவரும் பேசவரவில்லை. மாறாக ஒரு சிறுவனை, ஈவு இரக்கம் இன்றி, இவ்வாறு இராணுவத்தினர் கொன்றிருக்கிறார்களே என்பது தான் அனைவரது மனதையும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது. இப் படுபாதகச் செயலை, நாம் உலகறியச் செய்யவேண்டும் ! இலங்கையில் முகத் திரையைக் கிழியச் செய்யவேண்டும் ! இதற்காக நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் ? என்ற கேள்வி மானமுள்ள ஒவ்வொரு தமிழன் மனதிலும் உள்ளது. பிஸ்கட்டை சாப்பிடக் கொடுத்துவிட்டு, பின்னர் கொலைசெய்துள்ல இலங்கை இராணுவத்தின் முகத்திரையை எவ்வாறு கிழிப்பது ? 

இன்று பிரித்தானியாவில்(லண்டன் மையப்பகுதியில்) பாலச்சந்திரன் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுர வினியோகம் ஆரம்பமாகியுள்ளது. மதியம் 12.00 மணி தொடக்கம் ஈஸ்ட்காம், வக்ஸ்கோல், கனரிவோப், படிங்டன் என்று பல தொடரூந்து நிலையங்களில், தமிழர்கள் பாலச்சந்திரன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற துண்டுப் பிரசுரங்களை வழங்க இருக்கிறார்கள். இதனை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) முன் நின்று ஆரம்பித்துள்ளது. பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள், வேற்றின மக்களுக்கு பாலச்சந்திரன் படுகொலைதொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வழங்கி, பின்னர் ஏனைய தொடரூந்து நிலையத்துக்குச் செல்லவுள்ளனர். இப்படியாக இன்று நாள் முழுவதும் நகர்ந்து, இறுதியில், ரவகல் சதுக்கத்தை அடைந்து, அங்கே நடமாடும் பொதுமக்களுக்கும் துண்டுப் பிரசுரத்தை வழங்கவுள்ளார்கள். இன்று கடுமையான குழிர் காலநிலை லண்டனில் நிலவுகிறது. இதனையும் பொருட்படுத்தாது, இளையோர்கள், மற்றும் TCC உறுப்பினர்கள் வீதிகளில் இறங்கியுள்ளார்கள். 

எனவே பிரித்தானியா வாழ் மக்களே ! நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். முடியவில்லை என்றால் கூட அவர்களை ஊக்கப்படுத்துங்கள். தேனீர் அல்லது சிற்றுண்டியைக் கொண்டு சென்று கொடுத்து அவர்களை உச்சாகப்படுத்துங்கள். பால்ச்சந்திரன் கொலைக்கு இலங்கை அரசு பதில்சொல்லியே ஆகவேண்டும் ! இதற்காக மனச்சாட்சியுள்ள எந்தப் பொதுமக்கனையும், அரசியல் தலைவர்களையும் நாம் நாடத் தயார் என்பதனை உலகறியச் செய்வோம் ! 

நீங்களும் துண்டுப் பிரசுரங்களை வழங்க விரும்பினால்: தொடர்புகளுக்கு: 0203 371 9313







லண்டன் ரயில் நிலையங்களில் பாலச்சந்திரன் தொடர்பாக கொடுக்கப்படும் துண்டுப்பிரசுரம் !
23 February, 2013 by admin
இன்று மதியம் 12.00 மணிக்கு லண்டனில் ஆரம்பமான துண்டுப்பிரசுர வினியோகம், இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடும் குழிர்(- 2) டிகிரி கால நிலை காணப்பட்டாலும் பல தொண்டர்கள், தொடரூந்து நிலையங்களுக்கு முன்னதாக, நின்று துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். பிரித்தானியாவின் மையப் பகுதியை குறிவைத்தே இந்த துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 

பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக, நீதி கேட்டும் ஐ.நா மற்றும் காமன்வெலத் நாடுகளிடம் நீதி கேட்டும் இத் துண்டுப் பிரசுரங்கள் வினியோக்கிக்கப்படுகிறது. ஆயிரக் கணக்கில் அடிக்கப்பட்டுள்ள, இத் துண்டுப் பிரசுரங்களை வினியோகிப்போர் ஒவர் தொடரூந்து நிலையங்களூடாக நகர்ந்து இறுதியில் ரவல்கர் சதுக்கத்தை அடைவார்கள் என்று அறியப்படுகிறது. இன்று இரவு ரவல்கர் சதுக்கத்தில் நின்று மேலும் பல்லாயிரக் கணக்கான துண்டுப் பிரசுரங்கள அவர்கள் வினியோகிப்பார்கள். இதனை மிகவும் நேர்த்தியாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) செய்துள்ளார்கள். 

இதில் பல பொதுமக்கள் தொண்டர்களாக இணைந்து, இத் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து வருவது குறிப்பிடத்தக்க விடையமாகும்.



http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4598


Geen opmerkingen:

Een reactie posten