தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 februari 2013

பொதுநலவாய மாநாட்டை அவுஸ்திரேலியா பகிஸ்கரிக்க வேண்டும்: சட்டத்தரணி ஜிப்ரி ரொபர்ட்சன்


இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர் மாநாட்டை அவுஸ்திரேலியா பகிஸ்கரிக்க வேண்டுமென பிரபல சட்டத்தரணி ஜிப்ரி ரொபர்ட்சன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் இலங்கை மாநாட்டை பகிஸ்கரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கையும், ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கங்கள் இந்த மாநாட்டை பகிஸ்கரிக்க வேண்டும்.
இலங்கையில் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநாட்டில் பிரிட்டன் மஹாராணி கலந்து கொள்ளக் கூடாது.
இலங்கை நீதிமன்றத் துறையில் ஏற்பட்ட தலையீடுகளை பெரிதுபடுத்தாமல் விடக் கூடாது.
அவ்வாறு செய்வதன் மூலம் உலகின் வேறு நாடுகளிலும் இவ்வாறான நெருக்கடி நிலைமைகள் ஏற்படக் கூடுமென சட்டத்தரணி ஜிப்ரி ரொபர்ட்சன் தெரிவித்துள்ளார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYnu2.html#sthash.nUkWZ7Bn.dpuf

Geen opmerkingen:

Een reactie posten