முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் பேராளியான எஸ். சாந்தினியை இலங்கை அரசாங்கம், புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு பின்னர், இலங்கை கடற்படையின் இசைக்குழுவில் இணைந்து கொண்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம் ஒன்றில் பயிற்சிகளை பெற்ற இவர், மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் தலையீட்டின் அடிப்படையில் சர்வதேச பாடசாலை ஒன்றில் உயர்க்கல்வியை பெறவுள்ளதாக மகிந்தரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் இசைக்குழுவில் இணைத்து கொள்ளப்பட்டுள்ள சாந்தனி, நேற்று அலரி மாளிகையில் அதிபர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதாகவும் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இதன் போது, மகிந்தரின் பாரியார், அவரது மகனான இலங்கை கடற்படையின் உப லெப்டினட் யோசித ராஜபக்ஷ ஆகியோரும் உடனிருந்தனர் என்றும் மேலும் அறியப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten