தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 februari 2013

இலங்கை தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணை வேண்டும்!- ஐ.நா.வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !


இலங்கைத் தீவினை மையப்படுத்திய அனைவரினது பார்வையினையும் நோக்கியதாகவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துகின்றது.
இலங்கை  அரசாங்கத்திற்கு சவால் மிகுந்த இராஜதந்திரக் களமாக ஐ.நா மனித உரிமைச் சபை அமைந்துள்ள நிலையில் சர்வதேச அரங்கொன்றில் இலங்கை அரசாங்கத்தினை அம்பலப்படுத்தவும், தனிமைப்படுத்தவும், தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினை வலியுறுத்தியும் ஐ.நா மனித உரிமைச் சபையில் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கூடிவருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைத் தீவில் யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்புக் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபை விகாரங்களுக்கான நா.தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவினர் மற்றும் நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஜெனீவாவிலும் வெவ்வேறு நாடுகளிலும் தங்களது இராஜதந்திரச் செயற்பாடுகளைத் பல்வேறு மட்டங்களிலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த அந்தந்த நாடுகளுக்கு  இலங்கை தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தும் வகையில் தபால் அட்டைகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிடுகின்றது.

http://www.tamilwin.com/show-RUmryCRZNXetz.html


வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதனால் சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன: திஸ்ஸ அத்தநாயக்க
[ திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013, 03:01.25 PM GMT ]
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய காரணத்தினால் சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பெருந்தோட்டத்துறை மஹிந்த சமரசிங்க ஆகியோர் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த ஆவணமொன்றிலும் கைச்சாத்திட்டனர்.
எனினும், மாநாடு பூர்த்தியாகி ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.
வலுவான ஓர் நீதிமன்றக் கட்டமைப்பின் அவசியம் எழுந்துள்ளது. துரதிஸ்டவசமாக நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பின் நம்பிக்கைத் தன்மை சீர்குலைந்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
ஜெனீவா பிரச்சினையின் போது மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் ஐக்கிய தேசியக் கட்சி குரல் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இங்கிலாந்து விஜயம் செய்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க, இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten