2013ம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முற்பகல் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது
திராவிடர் விடுதலை கழகத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நேற்று முற்பகல் 11 மணிக்கு இந்தியன் சீமெந்து அலுவலகத்தின் முன்னால் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சண்ரைஸ் ஹைத்ராபாத் ஆகிய அணிகளில் இலங்கை அணி வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றமைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக கழகத்தின் செயலாளர் பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்களை கொலை செய்த அரசாங்கத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் வீரர்கள், இந்தியன் பிரிமியர் லீக்கில் பங்கேற்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten