ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மூன்று தரப்பினர் நடவடிக்கை
நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் மூன்று தரப்பினர் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர்.
அமெரிக்க நிதி உதவியின் அடிப்படையில் இயங்கி வரும் மனித உரிமை நிறுவனம், அமெரிக்க ஆதரவு மேற்குலக நாடுகள் மற்றும் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் ஆகியோரே இந்த மூன்ற தரப்பினராகும்.
மனித உரிமைப் பேரவை மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே சில வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு எதிராக அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் 21ம் திகதி முன்வைக்கப்பட உள்ளது.
மார்ச் மாதம் 4ம் திகதி இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நடைபெறவுள்ள எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.
|
Geen opmerkingen:
Een reactie posten