இலங்கையில் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை அம்பலப்படுத்தும் சனல்-4 தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்” பரபரப்பு காணொளிக் காட்சி இன்று ஐ.நா. சபையில் திரையிடப்படுகிறது.
இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாப்பு பிரதேசம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்குற்ற மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் சனல்-4 தொலைக்காட்சி நோ பயர் சோன் என்ற ஆவணப்படத்தின் சில காட்சிகளை வெளியிட்டது.
அதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் இளையமகன் 12 வயது பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் முகாமில் பிடித்து கொல்லப்பட்ட தகவல் வெளியானது. மேலும், தமிழர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்படும் காட்சிகளும் சித்திரவதைப்படும் ஆகிய காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.
இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது. இதையடுத்து, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக மேலும் ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை அமைப்பால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக மேலும் ஒரு காணொளிக் காட்சி வெளியிடப்பட்டு உள்ளது.
ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. இறுதிக் கட்டம் என்ற தலைப்பில் காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும் சிங்கள இராணுவத்தின் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பிய தமிழர்களின் வாக்கு மூலங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் கூட்டத் தொடரில் புதிய காணொளிக் காட்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு அதிகாரிகளுக்கு போட்டு காண்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No Fire Zone" video footage would be screened at UNHRC today |
[ Wednesday, 27 February 2013, 08:52.08 AM GMT +05:30 ] |
This video clips would brief about the death of LTTE leaders 12 year-old son Balachandar while at the military custody. International community shocked and surprised over this video footage and also demands to impose economic sanction against SriLanka. Tamils escaped from the Sinhala military custody and tortures has also given evidence to this video footage, sources said. http://eng.lankasri.com/view.php?223OY5Zc203OmBZc4e2AyOlJacaeeWAAaddecKMMK0acddlOe0e4d5BmA23024n5Ym42 |
Geen opmerkingen:
Een reactie posten