ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர், ஏனைய நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பிராந்திய அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமுகமான முறையில் நடைபெற்றுள்ளது.
வடக்கு மக்கள் மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தல், தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் மற்றும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten