தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 februari 2013

பிரித்தானியாவில் தமிழர்களின் நாடு கடத்தலை லண்டன் நீதிமன்றம் தடுத்தது!


பிரித்தானியாவில் அடைக்கலம் நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் சிலரின் நாடு கடத்தலை லண்டன் நீதிமன்றம் தடுத்துள்ளது.
இறுதிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டநடவடிக்கைகளை அடுத்து இன்று திருப்பியனுப்பப்படவிருந்த தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் அவர்கள் தொடர்ந்தும் விசாரணைகளுக்காக பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு திரும்பினால் குறித்த தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றே லண்டன் நீதிமன்றம் தமிழர்களின் நாடு கடத்தலை தடுத்துள்ளது.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த தமிழ் அகதிகள் தடுத்து நிறுத்தம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரித்தானியாவில் இருந்து அகதி தஞ்சக் கோரிக்கை  நிராகரிக்கபட்டு சிறப்பு விமானம் மூலம்  இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த தமிழ் அகதிகளின் பயணம் தடுத்து நிறுத்தபட்டுள்ளது.
சட்டத்தரணிகளின் அதிரடி நடவடிக்கையினாலேயே இந்த பயணம் தடுத்து நிறுத்தபட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட நாட்டின் வழிகாட்டல் வழக்கு முடியும் வரை தமிழ் அகதிகளை நாடு கடத்தக் கூடாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் இதுவரை காலமும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் பதியாமல் இருக்கும் தமிழ் அகதிகளை உடனடியாக அவர்களது பெயர் விபரங்களை நீதிமன்ற முகாமையாளருக்கு தாங்கள் தமிழ் அகதிகள் என்பதை அறிவிக்குமாறு கேட்டுகொள்ளபடுகின்றனர்.
இத்தகவலை பிரபல சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் தெரிவித்துள்ளார். 
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYnt0.html#sthash.pefCy3CF.dpuf

Geen opmerkingen:

Een reactie posten