பிரபாகரனின் இளைய மகன் சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை உலக மெங்கும் அதிர்ச்சியையும் கவலையையும் உருவாக்கியிருக்கிறது. ராஜபக்ஷவின் போர்க் குற்றங்களை நிரூபிக்க தன் உயிரை தியாகம் செய்திருக்கிறார் பாலச்சந்திரன்.
அதே போல இலங்கையின் போர்க் குற்றங்களை நிரூபிக்க சர்வதேச அளவில் பல முயற்சிகளையும் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது அம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பு. இந்த அமைப்பின் இந்திய தலைமை இயக்குநர் ஜி.அனந்தபத்மநாபன் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இலங்கையில் ராஜபக்ஷ அரசின் இன அழித்தொழித்தலுக்கு நிறையக் கொடூரமான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில் அம்னெஸ்டி இன்டர்நேசனல் எடுக்கும் முயற்சிகளை விவரிக்க முடியுமா?
இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக நடந்துள்ள போர்க்குற்றங்களுக்கு நிறைய ஆதாரங்களும் சாட்சிகளும் இருக்கின்றன. போர்க் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் வலிமையானது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால்தான் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். அதனால் சர்வதேச அளவில் அதனை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. அதனை நிரூபிக்க வேண்டுமாயின் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அந்த விசாரணைக்காகத்தான் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு. குறிப்பாக, ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் 35 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. உறுப்பினர்களாக இருக்கும் அந்த 35 நாடுகளிலும் உள்ள அம்னெஸ்டி அமைப்பினர் அந்தந்த நாட்டு அரசாங்கத்துடன் பேசி, விவாதித்து இலங்கையின் மீதான போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
இந்திய அரசை வலியுறுத்துவதற்கு அல்லது இலங்கை தொடர்பான அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதற்கு என்ன மாதிரி முயற்சிகளை எடுத்திருக்கிறீர்கள்?
இந்தியாவின் பார்வை மாற வேண்டும் என்பதற்காக இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான ஆதார ஆவணப் படத்தை டெல்லியில் திரையிட்டு காட்சிப்படுத்த வேண்டும் என முயற்சி எடுத்தோம். அதனடிப்படையில் அம்னெஸ்டியும் சனல்- 4 நிறுவனமும் இணைந்து அந்த ஆவணப்படத்தை டெல்லியில் திரையிட்டிருக்கிறோம். இதனையடுத்து, இந்திய அரசின் குடியரசு தலைவர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பலரையும் சந்தித்து விவாதிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைச் சேராத எம்.பி.க்கள் 200-லிருந்து 300 வரை இப்பிரச்சினையில் கவனம் செலுத்த வைத்து போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மை களை அவர்களிடம் நிரூபித்து அவர்கள் வழியாக பிரதமரிடம் மனு கொடுக்க வைப்பது எங்களின் நோக்கம்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர் பான ஆவணப்படம் டெல்லியில் எத்தகைய தாக் கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கருதுகிறீர்கள்?
டெல்லியில் இந்த ஆவணப்படத்தை தேசிய அளவிலான பத்திரிகையாளர்கள், சில எம்.பி.க்கள், கொள்கை வகுப்பாளர்கள், மனித உரிமை அமைப்பினர் மற்றும் பல தரப்பட்ட மக்கள் பார்த்தனர். படத்தின் முடிவில் எல்லோர் முகத்திலும் அதிர்ச்சிதான். இப்படிப்பட்ட கொடூரங்கள் இலங்கையில் நடந்துள்ளதா? என்று முதன் முதலாக கேள்விகள் அவர்களிடத்தில் எழுந்துள்ளன. அதுவும், பிரபாகரனின் இளைய மகனான சிறுவன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டும் பிறகு படுகொலை செய்யப்பட்டதுமான புகைப்படங்களைக் கண்டு அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. பச்சை பாலகன் செய்த தவறென்ன? என்கிற உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
டெல்லியில் வெளியிடப்பட்ட ஆவணப் படத்தை அடுத்து வேறு சில ஆதாரங்களும் இருப்பதாக சொல்லி வருகிறார்கள். அதில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
போர்க்குற்றங்கள் தொடர்பாக, தற்போது தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தின் மொத்த நீளம் 83 நிமிடங்கள். அதில் 22 நிமிட காட்சிகள் மட்டுமே டெல்லியில் திரையிடப்பட்டிருக்கிறது. மார்ச்சில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் முன்பு முழு ஆவணப்படத்தினையும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், முழு படத்தையும் நாங்கள் இன்னும் பார்க்கவில்லை.
இலங்கையின் போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு ராஜபக்சேவிற்கு தண்டனை கிடைக்கும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
-நிச்சயமாக. ஆனால், நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி நாளைக்கோ அடுத்த மாதமோ அடுத்த வருடமோ இது நடக்கும் என்று நான் சொல்ல மாட்டேன். இலங்கைக்கு எதிராக கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது சில பரிந்துரைகள் சொல்லப்பட்டன. இத னை இலங்கை அரசும் ஏற்றுக்கொண் டது. ஆனால், இது வரை அதன்படி ஒரு ஸ்டெப்பையும் ராஜபக்சே அரசு எடுக்கவில்லை. இதனை ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கவனத்தில் கொள்ளும். ஒரு நாட்டின் மீது படிப்படியான நடவடிக்கைகளை தான் ஐ.நா.சபை எடுக்கும்.முதல் நடவடிக்கையாக மனித உரிமை கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதன்படி நடக்க வலியுறுத்தியது. அதனை ராஜ பக்சே மதிக்கவில்லை.
அதனால் இனி அடுத்த கட்ட நடவடிக்கைகளை சர்வதேச விதிகளுக்கேற்ப அவ்வவ்போது முடிவு எடுக்கும். போர்க்குற்றங் கள் மனித உரிமை மீறல்கள் என்கிற வகையில் சுருங்கி விடாமல் அந்த குற்றங்கள் ஒரு இன அழிப்பு என்பதை நிரூபிக்க எல்லாவித முயற்சி களையும் அம்னெஸ்டி இன்டர்நேசனல் எடுத்து வருகிறது. போர்க்குற்றவாளிகள் தப்பிக்க முடியாது.
http://www.tamilwin.net/show-RUmryCRbNYnq0.html
Geen opmerkingen:
Een reactie posten