தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 februari 2013

Court rejects police request to close the mass grave

புதைகுழியை மூடவேண்டும்: CID வேண்டுகோளை நிராகரித்த நீதிமன்றம் !
மாத்தளை வைத்தியசாலைக்கு அருகாமையில், திருத்தவேலைகளுக்காக மண் தோண்டப்பட்டது. அப்போது அங்கே காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது. தோண்டத் தோண்ட பல எலும்புக்கூடுகளும் மண்டை ஓடுகளும் மீட்க்கப்பட்டு வருகிறது. இதுவரை 200 க்கும் அதிகமான மண்டை ஓடுகள் மீட்க்கப்பட்டுள்ளது. மனிதப் புதைகுழி என்று சொல்லப்படும் அளவுக்கு, பலரது உடலங்கள் இங்கே புதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது வலுப்பெற்றுவரும் நிலையில், இப் புதைகுழியை மூடவேண்டும் என்று கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசார் நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது. 

நேற்றைய தினம் மாலை, வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது குற்றத்தடுப்பு பொலிசார் சார்பாக ஆஜரான வக்கீல், குறிப்பிட்ட புதைகுழியை மூடவேண்டும் என்று, அங்கே பணி நிறைவுபெற்றுவிட்டது என்றும் கூறியுள்ளார். அப் பகுதியில் முழுமையாக அகழ்வுகள் முடிவடைந்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அப் பகுதியில் இனியும் தோண்டினால், மேலதிக மண்டை ஓடுகள் கிடைக்கும் , எனவேதான் அதனை மூடுவிடுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு, இவ்வாறு கோருகிறது என்று எதிர்தரப்பு வக்கீல் தெரிவித்தார். இதனையடுத்து குறிப்பிட்ட இந்த புதைகுழியை மூடவேண்டாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து புதைகுழியை மேலும் தோண்டிப் பார்க்க அனுமதி கிடைத்துள்ளது.


Court rejects police request to close the mass grave
[ Thursday, 21 February 2013, 04:45.43 AM GMT +05:30 ]
A Sri Lankan court today rejected a request from the Criminal Investigation Department (CID) of police to close the mass grave excavated at a site in Matale of the Central Province.
Matale Magistrate Chathurika de Silva today rejected the request by the CID to close the pit where skeletal remains of over 150 people were found during a construction dig.
The unexpected discovery of the mass grave during construction at the Matale Hospital premises in November last year caused a massive controversy.
Police requested the pit covered since the excavations had ended but the Magistrate ordered the police to provide protection to the grave site since the investigation on the remains are being still carried out.
The excavations have been completed and some preliminary tests have been conducted on the remains but the systematic forensic investigations of the remains to identify the era of the dead and their identities are still ongoing.

http://eng.lankasri.com/view.php?224Old0acp5YOd4e3KMM302cAmB3ddeZBmS202eWAA2e4oY5naca3lOA42


Geen opmerkingen:

Een reactie posten