அனைத்துலக மட்டத்தில் இலங்கைக்கு கடும் சவாலாக அமைந்துள்ள சனல்-4 தொலைக்காட்சியின் ‘போர் தவிர்ப்பு வலயம்’ (No Fair Zone) ஆவணத் திரைப்படத்தினை ஐ.நா மனித உரிமைச்சபையில் திரையிட அனுமதிக்க வேண்டாமென இலங்கை கோரியுள்ளது.
இது தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான இலங்கைத் தூதுவர் ரவீநாத் ஆரியசிங்க முறைப்பாட்டினைத் தெரிவித்துள்ளார்.
உண்மைக்கு புறம்பான பதிவுகளுடன் இந்த ஆவணத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டில் போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் இனங்களுக்கு இடையிலான ஓற்றுமையினை இது சீர்குலைக்கும் என இலங்கை அரச தரப்பு தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten