தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 februari 2013

பாலச்சந்திரன் படுகொலைப் புகைப்படங்கள்!- யார் எடுத்தார்கள் என கோபத்தில் கொந்தளிக்கும் கோத்தபாய!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளதுடன், யார் இதனை எடுத்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள “நோ பயர் சோன்” புகைப்படங்களை பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார்.
அத்துடன், குறித்த புகைப்படங்களில் இராணுவ அடையாளங்களே இல்லை எனவும் அவ்வாறான படங்களை பார்த்துவிட்டு, அச்சிறுவன் இராணுவத்தின் பதுங்கு குழியில் உள்ளார் என சனல் 4 தொலைக்காட்சி எவ்வாறு கூற முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புகைப்படங்களை வெட்டி ஒட்டும் வேலையை இவர்கள் பல காலங்களாகவே செய்துகொண்டிருப்பதாகவும் கோத்தபாய குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இவ்வாறு இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த படங்களை எடுத்தவர் யார்? அவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட சிறுவர்களைப் பற்றி பேசுவதில்லை எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
மேலும் விடுதலைப் புலிகளால் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளவும் சயினைட் குளிசைகளை சப்பி சாப்பிடவும் பயிற்றப்பட்ட சிறுவர் போராளிகளைப் பற்றியும் இவர்கள் ஒருபோதும் பேசுவதில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten