தங்காலை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவருக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பா.உ பா.அரியநேத்திரனிடம் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாரியம்மன் கோவில் வீதி வெல்லாவெளியைச் சேர்ந்த 22 வயதுடைய சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் என்பவர் கடந்த 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி சந்தேகத்தின் பேரில் இராணவத்தினரால் கைதுசெய்யப்பட்டு புதிய மகசின் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்பு கடந்த 21ம் திகதி வழக்கு விசாரணைக்காக அம்பாந்தோட்டை தங்காலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது கடந்த 23ம் திகதி இரவு 10.30 மணியளவில் மதுபோதையில் இருந்த சிறை அதிகாரியினால் தனது உடம்பில் சப்பாத்துக்காலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இதனால் படுகாயமடைந்துள்ள அவர், தற்போது வெலிக்கடையில் உள்ள சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவரின் உயிருக்கு ஆபத்து நிகழும் பட்சத்தில் அதற்கான முழுப்பொறுப்பும் இந்த சிறைச்சாலை நிருவாகத்தையும் இந்த அரசையுமே சாரும் எனவும் தாக்குதலுக்குள்ளான கைதியின் உறவினர்கள் தன்னிடன் முறையிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYnu0.html#sthash.DMPbcb1M.dpufபின்பு கடந்த 21ம் திகதி வழக்கு விசாரணைக்காக அம்பாந்தோட்டை தங்காலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது கடந்த 23ம் திகதி இரவு 10.30 மணியளவில் மதுபோதையில் இருந்த சிறை அதிகாரியினால் தனது உடம்பில் சப்பாத்துக்காலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இதனால் படுகாயமடைந்துள்ள அவர், தற்போது வெலிக்கடையில் உள்ள சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவரின் உயிருக்கு ஆபத்து நிகழும் பட்சத்தில் அதற்கான முழுப்பொறுப்பும் இந்த சிறைச்சாலை நிருவாகத்தையும் இந்த அரசையுமே சாரும் எனவும் தாக்குதலுக்குள்ளான கைதியின் உறவினர்கள் தன்னிடன் முறையிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten