தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 februari 2013

இலங்கையில் மனித உரிமை தொடர்பில் மீண்டும் பிரித்தானியா வலியுறுத்து!


இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானிய அரச, வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் பெரனைஸ் சைடாவாசி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையின் மனிதவுரிமைகள் செயற்பாடுகள் குறித்து பிரித்தானியாவும் ஏனைய நாடுகளும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தற்போது வலுவான மீளமைப்பு திட்டமொன்று அவசியமாக இருப்பதாக பிரித்தானிய அமைச்சர் பெரனைஸ் சைடாவாசி சுட்டிக்காட்டியுள்ளார்

http://www.tamilwin.com/show-RUmryCRZNXes2.html

மனித உரிமைகளை முதலில் பிரித்தானியா மதிக்கிறதா??அப்படியானால் இலங்கைக்கு தமிழ் அகதிகள் எப்படி நாடு கடத்தப்படுகிறார்கள்???குருக்கள் கு ..னால் குற்றமில்லையோ??

Geen opmerkingen:

Een reactie posten