தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 februari 2013

இலங்கையின் முகத் திரையைக் கிழிய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?


இலங்கையின் முகத் திரையைக் கிழிய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?

வியட்நாம் நாட்டிற்குச் சென்ற அமெரிக்கா, அங்கே புரிந்த அட்டூழியங்கள் பல. கொத்தணிக் குண்டுகளையும், வெளைப் பாஸ்பரஸ் குண்டுகளையும் மக்கள் குடியிருப்புக்கு மேல் போட்டார்கள். 
இன்று ஈழத் தமிழினம் அனுபவித்த கொடுமைகளைப்போல அன்று வியட்நாமியர்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவை ஆகும். ஒரு கிராமத்தை அமெரிக்க வான் படை எரி குண்டு வீசித் தாக்கியவேளை, எரிகாயங்களோடு, உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் உயிரைக் காப்பாற்ற மரண பயத்தோடு ஓடும் ஒரு சிறுமியின் புகைப்படம் அப்போது வெளியானது.
இது உலகில் உள்ள அனைவரது நெஞ்சையும் தொட்டது. ஏன் இந்தப் போர்? என்று உலகத் தலைவர்கள் வெறுக்கும் வண்ணம் இப் புகைப்படம் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவே அமெரிகாவின் நிலைப்பாட்டையும் இறுதியில் மாற்றியது.
அன்று வியட்நாம் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட, அச் சிறுமியின் புகைப்படத்துக்கு நிகரான புகைப்படம் ஒன்று, இபோது தமிழர்கள் கைகளில் உள்ளது! அது தான் 12 வயதுப் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படம் ஆகும்.
அவன் தேசிய தலைவரது புதல்வன், என்று எவரும் பேசவரவில்லை. மாறாக ஒரு சிறுவனை, ஈவு இரக்கம் இன்றி, இவ்வாறு இராணுவத்தினர் கொன்றிருக்கிறார்களே என்பது தான் அனைவரது மனதையும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது.
இப் படுபாதகச் செயலை, நாம் உலகறியச் செய்யவேண்டும்! இலங்கையில் முகத் திரையைக் கிழியச் செய்யவேண்டும்! இதற்காக நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் ? என்ற கேள்வி மானமுள்ள ஒவ்வொரு தமிழன் மனதிலும் உள்ளது. பிஸ்கட்டை சாப்பிடக் கொடுத்துவிட்டு, பின்னர் கொலைசெய்துள்ல இலங்கை இராணுவத்தின் முகத்திரையை எவ்வாறு கிழிப்பது ?
நீங்களே முடிவு எடுங்கள்.

Geen opmerkingen:

Een reactie posten