இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய மட்ட விசாரணைகளுக்கு மேலாக சர்வதேச சுயாதீன மீளாய்வு விசாரணைகளும் அவசியம் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய பிராந்திய தலைவர் ஜீன் லமட்பேர்ட் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தொடர்ந்தும் பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படும் நிலை தொடர்வது குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மனித உரிமை காவலர்களுக்கு உயிரச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் பின்னணி ஆதரவும் காரணமாக அமைந்துள்ளதாக ஜீன் லம்பேர்ட் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தவேண்டும் என்று அண்மையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் யோசனை ஒன்றை நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொழில்வாய்ப்புக்களையும் சமூக வேலைத் திட்டங்களையும் அரசாங்கம் செயற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.
இருந்துபோதும், தமிழ் மக்களுக்கு அவர்கள் உரிமையுடன் வாழ்வது தொடர்பில் இன்னும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன என்றும் ஜீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிப்போர் தொடர்பில் இலங்கை இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதைப்பற்றி ஐரோப்பிய நாடாளுமன்றம் விசேடமாக விவாதிக்கவில்லை.
ஆனால் பொலிஸ் படை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படவேண்டும் என்ற கருத்தை மாத்திரம் ஐரோப்பிய நாடாளுமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது என்று ஜீன் லம்பேர்ட் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten