தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 februari 2013

வன்னிப் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாது!– யூஎஸ் எயிட் பணிப்பாளர் !


வன்னிப் பேரில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாது என யூ.எஸ். எயிட் நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் டெனிசே ரோலிங்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சான்றுகள் கிடையாது என முதல் தடவையாக அமெரிக்கப் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வன்னிப் போரில் உயிரிழந்தோர் பற்றிய தகவல்களை கோரிய போது டெனிசே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வன்னிப் போரின் போது 40000 முதல் 100000 வரையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக குளோபல் தமிழ் போரம் மற்றும் பிரிட்டன் தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
2ம் இணைப்பு
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக இம்முறை அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம், கடுமையானதாகவே இருக்கும் என்று அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் ஆசியப் பிரிவின் மூத்த பிரதி உதவி நிர்வாகியான டெனிசே றோலின்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,
“பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு இலங்கை பதிலளிக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.  பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்குப் பதிலளிக்குமாறு தனியே அமெரிக்கா மட்டும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இதே மனோநிலையில் பல நாடுகள் இருக்கின்றன.
இலங்கை  அரசுக்கு எதிரான கிளரச்சியை ஏற்படுத்த அமெரிக்கா முனையவில்லை. எந்த இரகசிய நடவடிக்கையிலும் அமெரிக்கா இங்கு ஈடுபடவில்லை. அவ்வாறு சந்தேகம் கொள்பவர்கள் தற்போதைய திட்டப் பகுதிகளை பார்வையிட முடியும்.
அமெரிக்காவின் உதவித் திட்டங்கள் அனைத்தும்  அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. இதில் இலங்கை  அரசு தொடர்புபடவில்லை. இதே விதிமுறைதான் ஏனைய நாடுகளிலும் அமெரிக்க உதவித் திட்டங்களின் போது கடைப்பிடிக்கப்படுகிறது. என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYnt2.html#sthash.RcFwlsv6.dpuf

Geen opmerkingen:

Een reactie posten