தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 februari 2013

அதிரும் பிரித்தானியப் பாராளுமன்றம் (7ம் இணைப்பு)!!


பிரித்தானியாவில் இன்று காலை 10.00 மணிக்கு உலகத் தமிழர் பேரவையின்(GTF) 3வது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நடைபெறும் இக் கூட்டத்திற்கு பிரித்தானிய உதவிப் பிரதம மந்திரி கலந்துகொள்வது , பிரித்தானியத் தமிழர்களை பெருமிதமடையச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கமானது இக் கூட்டத்தை எப்படியாவது தடைசெய்யவேண்டும் எனக் கோரியதும் அறியப்பட்ட விடையம் ஆகும். குறிப்பாக பிரித்தானியாவில் நடைபெறும், மகாராணியின் கூட்டம், பாராளுமன்ற அமர்வுகளுக்கே 3 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் பிரித்தானிய வரலாற்றிலேயே இது தான் முதல் தடவையாக, 3 கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் தமிழர்களின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். 

இது நிச்சயமாக, ஈழத் தமிழர்களுக்கு பிரித்தானிய அரசு எவ்வகையில் ஆதரவு தெரிவித்துள்ளது என்பதனை நன்கு விளக்கும் வகையில் அமைந்துள்ளது. இன்றைய கூட்டத்தில், பிரித்தானியாவின் முக்கிய எம்.பீக்கள் பலர், அமைச்சர்கள், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள், சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள், ஐ.நா வின் நிபுணர் குழு அங்கத்தவர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் , மற்றும் தமிழ் புத்திஜீவிகள் என்போர் கலந்துகொண்டுள்ளார்கள். இன்று நடைபெறும் இம் மாநாட்டில் முக்கியமான பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது . 

இவை அனைத்தும் அவ்வப்போது அப்-டேட் செய்யப்படவுள்ளது. எனவே மேலதிகச் செய்திகளுக்கு, அதிர்வுடன் இணைந்திருங்கள்.



10.40AM: ஆளும் கட்சி எம்.பியான ரொபேட் ஹல்போன் , இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றுள்ளது என்றும், போர் குற்றம் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டும் அல்லாது, இலங்கையில் காமன்வெலத் மாநாடு நடக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஆழும் கட்சியின் எம்.பியின் இக் கூற்றுக்கு மிகவும் பலம்மிக்கதாக இருக்கும் என நம்பப்படுகிறது. 







11.00 AM பீட்டர் கில்னர் எம்.பி இக் கூட்டத்தில் பேசும்போது, பிரித்தானிய அரசு புலிகளை பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறது என்று தெரிவித்தார். இதனை GTF மற்றும் BTF போன்ற அமைப்புகள் மக்கள் சக்தியோடு இயங்கி இதனை இல்லாதொழிக்கவேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.









11.30 AM புலிகளை நான் ஆதரிக்கிறேன் ! பாராளுமன்றில் முழங்கிய காதர் மாஸ்டர் ! இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் GTF கூட்டத்தில், சம்பந்தர் ஐயாவுக்கு அருகில் அமர்ந்திருந்த காதர் மாஸ்டர் , அனைத்து எம்.பீக்களுக்கு முன்னர் தாம் புலிகளை ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார். புலிகள் எதற்காகப் போராடினார்களோ அதுவே சரியான விடையம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். கையில் ஆயுதத்தை எடுங்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் புலிகளை நான் பிழைசொல்லவும் மாட்டேன் என்று அவர் கூறிய கருத்துக்கள், பலத்த வரவேற்ப்பைப் பெற்றது. ஒரு முஸ்லீமாக நான், இருந்து இதனைத் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். சம்பந்தர் ஐயா பக்கத்தில் இருந்தவேளை, காதர் மாஸ்டர் தெரிவித்துள்ள கருத்தானது ஐயாவை வெட்க்கி நாணவைத்துள்ளது. 






12.00 NOON :ஐ.நா நிபுணர் குழுவின் அங்கத்தவர் ஜஸ்மின் சூக்கா உரையாற்றியுள்ளார். இலங்கை அரசின், நம்பகத் தன்மை குறைந்துவிட்டது என்றும். பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதிப் போரில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை சகஜவாழ்க்கை திரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ள சூக்கா, தமிழர்களின் சுகந்திரன் இதுவரை கேள்விக்குறியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது சட்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ள கருத்துக்கள், பெரும் வரவேற்றைப் பெற்றுள்ளது. 









12.30NOON :தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் உரையாற்றினார். கொல்லப்பட்ட மக்கள் தொடர்பாக பேசிய அவர், மூதூர் படுகொலை மற்றும் திருகோணமலை படுகொலைகள் தொடர்பாக தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சர்வதேச போர்குற்ற விசாரணை தேவை என்று கூறியுள்ள சம்பந்தர் ஐயா, இலங்கை அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ள சம்பந்தர் பலவருடங்களாக இலங்கை அரசு தமிழர்கள் அப்பட்டமாக ஏமாற்றிவருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4617

Geen opmerkingen:

Een reactie posten