தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 februari 2013

இலங்கையின் போர்க்குற்றம்: இந்திய மாநிலங்களவையில் பரபரப்பு விவாதம் ஆரம்பமாகியது!


இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பிரச்னை தொடர்பாக சிறப்பு விவாதம் நடத்தக் கோரி அதிமுக சார்பில் மைத்ரேயன், திமுக சார்பில் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி. ராஜா உள்ளிட்ட எம்.பி.க்கள் அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்திருந்தனர்.
மேலும், பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த வெங்கையா நாயுடு, சிவசேனா கட்சியின் சஞ்சாய் ராட் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் அளித்தனர்.
இந்நிலையில், இலங்கை போர்குற்றம் குறித்து மாநிலங்களவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயின் கொண்டு வந்தார்.
அப்போது விளக்கம் அளித்துப் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை தமிழர்களுக்கு இந்தியா பெரும்பாலான மனித உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், 2012 செப்டம்பர் மாதம் அனைத்து முகாம்களும் மூடப்பட்டதாக இலங்கை அரசு, இந்தியாவிடம் தகவல் அளித்துள்ளதாக கூறினார்.
அதுமட்டுமின்றி இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் சல்மான் குர்ஷித் கூறினார். இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இந்தியா விரும்புகிறது என சல்மான் குர்ஷித் விளக்கம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து தீர்மானத்தை கொண்டு வந்த அதிமுக எம்.பி. மைத்ரேயன் பேசுகையில்,
இலங்கை பிரச்னைக்கான மூல காரணத்தை ஏற்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறுக்கிறது. இலங்கை பிரச்சனைக்கு விடுதலைப் புலிகள் காரணம் இல்லை. தமிழர்கள் ஒடுக்கப்பட்டதாலேயே விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றியது.
இலங்கை தமிழர்களின் போராட்டம் ஒரு முழுச் சுற்று வந்து முடிந்துள்ளது. 1948 முதல் 1983 வரை அகிம்சை வழியில் இலங்கைத் தமிழர்கள் போராடி வந்தனர். அதன் பின் தொடங்கிய ஆயுதம் போராட்டம் 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது.
இலங்கை புரிந்த போர் குற்றத்தில் குழந்தைகள் கொல்லப்படுதல், தமிழர்கள் காணாமல் போதல் மற்றும் படுகொலைகள் நடந்தன. இலங்கை புரிந்த போர் குற்றத்தில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.பல தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்" என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராஜா ஆகியோர் பேசுகையில்,
போர்க்குற்றம் புரிந்துள்ள இலங்கையை இந்தியா கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவரைத் தொடர்ந்து திமுக எம்,பி. திருச்சி சிவா, விவாதத்தில் பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து பா.ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். அவர் பேசுகையில் இலங்கையில் செல்வாக்கை செலுத்த இந்தியாவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என்றார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நாயுடு, பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் பிடித்து வைத்துக்கொன்றது மன்னிக்க முடியாத செயல் என்றும் அவர் கூறினார்.

மேலும் புலிகளை காரணம் காட்டி, இலங்கை அரசின் செயலை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

வெற்று வாக்குறுதிகளால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் நாயுடு தெரிவித்தார்.
http://www.tamilwin.net/show-RUmryCRbNYnp6.html

Geen opmerkingen:

Een reactie posten