[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 10:34.51 AM GMT ]
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரின்போது, ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க உத்வியதாக மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை, மே 17 இயக்கத்தினர் இன்று முற்றுகையிட்டனர்.
அப்போது காங்கிரஸ் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய அமைச்சராக பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே.நாராயணன், வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர மேனன் உள்ளிட்டோரை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அண்ணா சாலையிலிருந்து, சத்திய மூர்த்தி பவனை நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி, கைது செய்தனர்.முன்னதாக சத்திய மூர்த்தி பவனிலிருந்த காங்கிரசாரும் பதிலுக்கு கோஷம் எழுப்பியதோடு, சாலையில் அமர்ந்து போட்டி போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே அனுப்பினர்.
இது தொடர்பாக மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசுகையில்,
இறுதிக்கட்ட போரின்போது, 4 லட்சத்து 20 ஆயிரம் தமிழர்களை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்து, அவர்கள் மீது குண்டுமழை பெய்தது. ஆனால் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெறும் 70 ஆயிரம் பேர்தான் இருந்தனர் என்றார்.
செஞ்சிலுவை சங்கம் உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வெளியிடும் தகவல்கள், பிரணாப் சொன்னது பொய் என்பதை உறுதி செய்கிறது.
தமிழர்களை கொன்று குவிக்க உதவிய காங்கிரஸ் கட்சி அலுவலகம் தமிழகத்தில் இருக்கக்கூடாது. அதனை மூட வேண்டும். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் பதவி விலக வேண்டும்" என்றார்.
இலங்கையின் சிங்கள நடுவரை வெளியேற்ற வலியுறுத்தி சென்னையில் கிரிக்கெட் மைதானம் முற்றுகை
[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 09:54.16 AM GMT ]
அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி தமிழகத்தை உலுக்கியது.
இந்த புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று தமிழக அரசும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சிங்களவரான தர்மசேன என்பவர் நடுவராக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
http://news.lankasri.com/show-RUmryCRXNXfu5.html
Pro-Eelam outfit protests against Kumar Dharmasena |
[ Saturday, 23 February 2013, 10:42.14 AM GMT +05:30 ] |
About 50 activists of a pro-Eelam outfit were arrested today for staging protest outside M. A. Chidambaram stadium in Chennai against a Sri Lankan umpire officiating in the first India-Australia cricket Test match. |
Members of the little-known ‘Thanthai Periar Dravidar Kazhagam’ were arrested for staging protest against the presence of umpire Kumar Dharmasena, police said. The black outfit wearing activists raised slogans against Sri Lankan president Mahinda Rajapakse for the alleged killing of slain LTTE chief V Prabhakaran’s 12-year-old son Balachandran and objected to the presence of a Lankan official for the sporting event. Meanwhile, another pro-Eelam outfit, the “May 17 Movement”, staged a protest outside TNCC headquarters Sathyamurthy Bhavan for the alleged killing of Balachandran. Around 25 activists were detained, police said. http://eng.lankasri.com/view.php?224Old0acT5YOd4e3KMM302cAmB3ddeZBmS202eWAA2e4SY5naca3lOU42 |
இலங்கை தேசிய கொடியும் மகிந்தவின் உருவ பொம்மையும் எரிப்பு!- தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 100 பேர் கைது
[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 08:24.58 AM GMT ]
இலங்கை தமிழர் படுகொலைக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், இலங்கைக்கு ஐ.நா.சபை பொருளாதார தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று தமிழகத்தில் புதுச்சேரி காமராஜர் சிலை அருகில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை சிங்கள இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை பெரியார் திராவிடர் கழகத்தினர் அதன் தலைவர் வீரமோகன் தலைமையில், காமராஜர் சிலை அருகே ஒன்று கூடி இலங்கை தேசியக் கொடியையும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உருவ பொம்மையையும் எரித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழக துணை தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பாலமுருகன், இளைஞர் அணி தலைவர் தீனா, தொகுதி தலைவர் பெருமாள், கிராமப்புற மக்கள் உரிமை அமைப்பு பொது செயலாளர் ஆறுமுகம், அகரம் கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபாகரன் மகன் படுகொலை எதிரொலி! சென்னை காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை
[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 08:04.34 AM GMT ]
தமிழீழப் படுகொலையில் காங்கிரஸ் அரசு நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதை கண்டித்து, பல தமிழ் உணர்வாளர்கள் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, தேசிய பாதுகப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் துணை போனதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் மே17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
இதில் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். முற்றுகை போராட்டத்தை முன் கூட்டியே அறிந்த காங்கிரஸ் கட்சியினர் அவர்கள் பாதுகாப்புக்கு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களையும் காவல் துறையினரையும் பாதுகாப்பக்கு அமர்த்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா விரும்பினாலும், இனி இலங்கை அரசை காப்பாற்ற முடியாது: மனோ கணேசன்
[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 06:35.42 AM GMT ]
இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசு விரும்பினாலும்கூட போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இனி இலங்கை அரசை காப்பாற்ற முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இன்று இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் எதிரோலிக்கின்றன. கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை, கேடயமாக இருந்து இந்திய மத்திய அரசு காப்பாற்றியது.
இந்நிலையில் இன்று அத்தகைய ஒரு முயற்சியை இந்திய மத்திய அரசு விரும்பினாலும்கூட செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும், உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழுமையாக அழித்துவிட வேண்டுமென்ற பொதுவான இலக்கு, கடைசிகட்ட யுத்தத்தின் போது இந்திய மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இருந்தது. இதனாலேயே பொதுமக்கள் இழப்புகளை பற்றிய எந்தவித அக்கறையும் இல்லாமல் யுத்தம் நடத்தப்பட்டது.
பொது மக்கள் இழப்புகளை பற்றி, மேற்குலக நாடுகள் அந்த வேளையில் குரல் எழுப்பிய போதெல்லாம் இந்திய மத்திய அரசு, இலங்கை அரசின் பெரியண்ணனாக இருந்து, சின்ன தம்பியை காப்பாற்றியது. இது உலகம் அறிந்த உண்மை.
அந்த வேளையில் இலங்கையில் யுத்தத்திற்கும், சமாதான அரசியல் தீர்வுக்கும் இடையில் தடையாக இருப்பது விடுதலை புலிகள் தான் என்றும், அந்த இயக்கம் அழிக்கப்பட்டால் இலங்கையில் சமாதான அரசியல் தீர்வு ஏற்பட்டுவிடும் என்றும், யுத்தம் முடிந்தவுடன் 13ம் திருத்தத்தை அமுல் செய்து அதை மேலும் முன்கொண்டு செல்ல இலங்கை அரசு தயாராக இருக்கின்றது என்றும், இந்திய அரசியல் தலைவர்கள் எங்களுக்கு சொன்னார்கள்.
ஆனால், இன்று யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்தும் இலங்கை அரசு எந்தவித அரசியல் தீர்வையும் தரவில்லை. அதுமட்டும் அல்லாமல், அரசியல் அமைப்பில் ஏற்கனவே இருந்த இந்தியாவின் குழந்தை 13ம் திருத்தம் முதற்கொண்டு உரிமைகளையும் வெட்டி குறைக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு பகிரங்கமாக ஈடுபட்டு, இந்தியாவின் கன்னத்தில் பலமுறை அறைந்துவிட்டது.
எனவே இன்றைய சூழலில் இந்திய பெரியண்ணன், இலங்கை அரசை இனியும் காப்பாற்ற முடியாது. இந்த அரசை நம்பி வாழுங்கள் என எமக்கு ஆலோசனை செய்யும் நிலையிலும் இந்திய மத்திய அரசு இல்லை. இதையே இன்று தமிழகம் உட்பட இந்தியா முழுக்க வாழும் மக்கள் மத்தியில் உறுதியாக ஏற்பட்டுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றது.
இந்த பொதுஜன அபிப்பிராயத்தை இன்று இந்திய மத்திய அரசு பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ மீற முடியாது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும், உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten