நாளை பிற்பகல் 4.30 மணிக்கு புதுடெல்லியில் அமைந்துள்ள அரசியலமைப்பு கழகத்தில் (Constitution Club) இந்த ஆவணப்படத்தின் 20 நிமிடககாட்சிகள் திரையிடப்படவுள்ளன.
இதையடுத்து, மாலை 5 மணியளவில் குழுநிலை விவாதம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதைாக தெரிவிக்கப்படுகிறது.
இதில், அனைத்துலக மன்னிப்புச் சபையின் இந்தியாவுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி ஜி.அனந்தபத்மநாதன், சனல்-4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லும் மக்ரே, ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் பிரதம செய்தி ஆசிரியர் எம்.ஆர்.நாராயணசாமி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பி.சகாதேவன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கையில் போர் குற்றம் நடந்தமைக்கான முழு ஆதாரமாக இக்காணொளி இருக்கும். இதை பார்த்தால் அங்கு என்ன போர்க்குற்றங்கள் நடந்தது என்பது தெளிவாக தெரியும்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் ஒருமுறை அந்த மண்ணில் இரத்தம் சிந்தப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும் என சனல்-4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லும் கருத்துத் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten