வலிகாமம் வடக்கு பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் முகாம்கள் இருப்பது அரசாங்கத்திற்கு தெரியாமல் போய் விட்டதே என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆச்சரியப்பட்டுள்ளார்.
இனித்தான் வலி.வடக்கு முகாம்கள் தொடர்பில் அரசாங்த்திற்கு தான் தகவல் தெரிவிக்கவுள்ளதாகவும் இதனால் விமோசனம் கிடைக்கும் என்றும் வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர்.
வலி. வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சில முகாம்களுக்கு நேற்று சென்ற அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது முகாம்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கே தான் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது முகாம்களிலிருந்த மக்கள் தமக்கு உதவிகள் வேண்டாம் காணிகளே வேண்டும் என்றும் இராணுவத்தினர் அபகரித்திருக்கும் தமது காணிகளை தமக்கு தர வேண்டும் என்று அமைச்சரை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன் போது செய்வதறியாத அமைச்சர் திரிவுபடுத்தப்பட்ட கருத்துகளை கூறி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYnuz.html#sthash.SkqTq7NA.dpufவலி. வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சில முகாம்களுக்கு நேற்று சென்ற அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது முகாம்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கே தான் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது முகாம்களிலிருந்த மக்கள் தமக்கு உதவிகள் வேண்டாம் காணிகளே வேண்டும் என்றும் இராணுவத்தினர் அபகரித்திருக்கும் தமது காணிகளை தமக்கு தர வேண்டும் என்று அமைச்சரை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன் போது செய்வதறியாத அமைச்சர் திரிவுபடுத்தப்பட்ட கருத்துகளை கூறி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten